பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லதா?
ஆரம்ப காலத்தில் பாதாம் பிசின் என்ற ஒரு பொருள் இருந்ததே பலருக்கும் தெரியாது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நிறைய வீடுகளில் பழச்சாறு மற்றும் ஆரோக்கிய குளிர் பானங்களில் சேர்க்கப்படுவதற்காக வைத்துள்ளனர். இப்படி பலரும் உணவு பொருட்களில் ஒன்றாக கருதும் பாதாம் பிசின் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியதா என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
நன்மையா?
பாதாம் பிசின் அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறைகளில் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியது மற்றும் உடலுக்கு நன்மை அளிக்க கூடிய வைட்டமின் E சத்து அதிகளவு உள்ளது.
இந்த பிசினில் சரும பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிஃளவனாயிடுகள் உள்ளதால் இது சருமத்திற்கு இளமை அழகை தரக்கூடியதாக உள்ளது.
மேலும், இது செல்லுலேட்டை குறைத்து சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பிசுக்குகளை கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளது.
பாதாம் பிசின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி முடி வளர்வதற்கு பயன்படுகிறது.
குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. ப்ரீபயாடிக்குகள் என்பது குடலிலுள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும்.
புரோபயாடிக்குகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், செரிமான ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன.
இவற்றில் உள்ள நார்ச்சத்து குடல் வாயுவின் உற்பத்தியை குறைக்கிறது.
அதிகளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளுக்கு வலுவை அளிப்பதோடு எலும்பு வளர்சிக்கும் உதவுகிறது.
புற்று நோயை எதிர்த்து போராடக் கூடியது மற்றும் விந்தணு உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும், இவை உடலிலுள்ள இரத்த அழுத்த குறைபாடு, உடல் சோர்வு, நரம்பு மண்டல பிரச்சினைகளை சரிசெய்யக் கூடியதாக உள்ளது.
உடலுக்கு பாதாம் பிசின் தரும் நன்மைகளை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.(ஷேர்)