ஜாதகப்படி ஒரே ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு ஏழரைச் சனி முதலிய பிரச்சனைகள் ஒரே நேரத்தில் வரும். அதனால், கணவன், மனைவி இருவரின் முன்னேற்றம் தடைபடும். எனவே, பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்க்கும்போது ஒரே ராசியை சேர்ந்த வரனை தவிர்ப்பது நல்லது என சிலர் சொல்வதுண்டு. இது தவறான கருத்தாகும், இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தசா புத்தி
ஒரே ராசியை சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை. தற்போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடக்கிறது என்பதால் விருச்சிக ராசியை சேர்ந்த அனைவருக்கும் துன்பம் தொடர்ந்து கொண்டிருப்பதில்லை. அவரவர் பிறந்த நேரத்தின் அடிப்படையைக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையும், நடக்கின்ற தசா புத்தியும் தான் பலன்களை நிர்ணயிக்கின்றன.
தவறான
ஒரு சிலரது ஜாதகத்தில் சனி பகவானே யோகத்தைத் தருபவராக அமர்ந்திருப்பார். அவர்களுக்கு ஏழரைச் சனியின் காலத்தில் தான் நன்மையே நடக்கும். ஒரு ராசியில் பிறந்த அனைவருக்கும் இன்பமானாலும் சரி, துன்பமானாலும் சரி ஒரே நேரத்தில் உண்டாகும் என்பது தவறான யூகமே.
ஏக ராசி
ஒரே ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதால் பரஸ்பரம் அன்யோன்யம் அதிகரிக்கும். இருவரின் புரிந்து கொள்ளும் தன்மையும் ஒன்றாக இருக்கும். ஏக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு பொருத்தமே பார்க்கத் தேவையில்லை, திருமணம் செய்யலாம் என்பதே ஜோதிட விதி. ஒரே ராசியை சேர்ந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதில் எந்தவித தவறும் இல்லை.
ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்வதால் பிரச்சனை எதுவும் ஏற்படுமோ என்று நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரையை பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).