download_indicator

நீராவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?

கடை, அலுவலகம் அல்லது வேறு எங்காவது வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது, அவற்றால் ஏற்படும் நோய்த்தொற்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகளை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்குவதற்கு, சூடான தண்ணீரில் சில மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறி விடும். மூச்சு குழாய் அடைப்பை சரி செய்து விடும். மேலும், நீராவியானது எந்த கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. சளித்தொந்தரவு, இருமல், ஜலதோஷம், தலைவலி, உடல் அசதி, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்றவைகளுக்கு நீராவி பிடிப்பதால் தீர்வு காணலாம். இந்நிலையில், எவ்வாறு ஆவி பிடிப்பது, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

எப்படி ஆவி பிடிப்பது

தண்ணீருடன் மஞ்சள், மிளகு, எலுமிச்சை தோல், தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி, மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி வரும்போது இறக்கி வைத்து பாதுகாப்பாக அமர்ந்து ஒரு போர்வையால் மூடி அந்த நீராவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும்.

முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதிகளில் ஆவி படும்படி மீண்டும் மீண்டும் பிடிக்க வேண்டும்.

கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். கண் மென்மையான பகுதியாக இருப்பதால் பாதுகாப்பாக நீராவி பிடிப்பது நல்லது.

நன்மைகள்

ஆவி பிடிக்கும்போது நாசித்துவாரம் வழியே உள்ளே செல்லும் நீராவி நுரையீரலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.

உடல் சோர்வு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும்.

ஆவி பிடிக்கும் போது உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். ஒருவர் ஆவி பிடித்த துணியில், தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது. இதனால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சுடுநீரில் ஆவி பிடிப்பதால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்த பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது.

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் எண்ணெயால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் முகப்பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அதையடுத்து, ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இளமைத் தோற்றதை கொடுக்கும்.



Follow Us on