ஓம் தமிழ் காலண்டர் வாசகர்களுக்கு கை ரேகை ஜோதிட நிபுணர் Dr நவீன் சுந்தரின் இனிய வணக்கம். இன்று இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது வேகம் எடுக்கும் சந்திரன் ரேகை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சந்திரன் ரேகை
நாம் வசிக்கும் பூமிக்கு அருகாமையில் உள்ள சந்திரனை மனதை குறிப்பவர் என்பதால் மனோ காரகன் என்று சொல்லப்படுவது உண்டு . அத்தகைய முக்கியத்துவம் உள்ள சந்திரன் மேட்டை உள்ளங்கையில் உள்ள சுண்டு விரலுக்கு அடிபாகத்திலும் சுக்கிரன் மேட்டுக்கு எதிர்புறமும், கங்கண ரேகைக்கு மேல்புறமும் இருக்கும்.
பெரும்பாலும், உபரேகை அளவில் தான் அழுத்தம் இல்லாமல் காணப்படும். இதைத்தான் நாம் சந்திரன் மேடு அல்லது சந்திரன் ரேகை என்று சொல்வது உண்டு. சிறிதாக இருந்தாலும் பிளவு படாமல் இருப்பது உத்தமம். இதை வைத்து எதிர்க்காலத்தை கணிக்க முடியும். செய்ய தக்கவை செய்யத் தகாதவை என்பதை வரையறுக்க முடியும். ரேகையின் பிரிவை கணிக்க முடியும்.
வரம் கிடைக்கும் நாள்
பொதுவாக வளரும் பருவத்தில் உள்ள பள்ளிக்கூட சிறுவர்கள் கைரேகை பார்க்க வேண்டியது இல்லை. அவர்கள் படிப்பு தொடர்பான கேள்விகள் இருந்தால் ஜாதகத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். சந்திரன் ரேகை கொண்டு மாதம் ஒரு முறை வரும் அவர்கள் நினைத்தது நிறைவேறும் வரம் கிடைக்கும் நாளை கணிக்க முடியும். செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்பதையும் கணிக்க முடியும்.