download_indicator

நவகிரகங்களின் தோஷத்திற்கு பரிகாரம் என்ன தெரியுமா?

முதல் மூர்த்தியாம் அருள்மிகு விநாயகப் பெருமானை வணங்கி செய்யப்படும் கணபதி ஹோமமே நவகிரகங்களின் தோஷங்களுக்கு சிறந்த பரிகாரம் ஆகும். ஆனால் கணபதி ஹோமம் செய்யும் பொழுது இராகுகாலம், எமகண்டம் போன்றவற்றை அவசியம் பார்க்க வேண்டும். 'நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!' என்று ஒரு பழமொழி உண்டு. அவ்வளவு முக்கியமானது நாளும் - நேரமும்.

திருத்தல யாத்திரை

தென்னகத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரக திருத்தலங்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். ஆனால், இவ்வழிபாட்டை அனைவரும் கடைபிடிப்பது கடினம் என்பதால் எளிமையாக கணபதி ஹோமம் செய்து வழிபடலாம்.

விதிப்பயன்

பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தீமையை அல்லது நடக்க இருக்கிற தீய விதியை மதியால் வெல்ல முற்படுவதே பரிகாரம் என்றுப் பெயர் பெறுகிறது. பொதுவாக அந்தத் தீமையை அடைய வேண்டும் என்பது விதிப்பயன். காரணம் நமது கர்ம வினையே அத்தீமைக்கு காரணகர்த்தாவாக விளங்குகிறது. இந்நிலையில் தாந்திரீக ரீதியாக சில பரிகாரங்களை செய்து அதில் இருந்து தப்பிக்க முற்படும் சமயத்தில். விதி அதனை தடுக்கத் தான் பார்க்கும்.

சில பரிகாரங்களை எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் பலரால் செய்ய முடிவதே இல்லை அல்லது பரிகாரம் செய்ய முற்படும் நாளில் உடல் அசௌக்கியம், பேரிடர் அல்லது இயற்கை சீற்றம், வீட்டில் பெண் தீட்டு ஆதல், சொந்தக்காரர் ஒருவர் இறந்து அதனால் தீட்டு ஏற்படுவது, பரிகாரம் செய்ய வேண்டிய கோயில் நேரம் கடந்து போனதால் கோயில் நடை சாற்றப்படுதல் போன்ற பிரச்சனைகள் எல்லாம் வருகிறது. இந்த லட்சணத்தில், இராகு காலம், எம - கண்டம் போன்ற அபசகுண நேரங்களை எல்லாம் மதிக்காமல் பரிகாரம் செய்தால் அது விளங்கி வருவது கடினம். அதனால் நவகிரகங்களின் தோஷத்திற்காக பரிகார பூஜையாக இருந்தாலுமே அதனை இராகு காலம், எம கண்டத்தில் செய்யாதீர்கள்.



Follow Us on