download_indicator

நைனா மலையிலும் ஒரு வரதராஜர்

வரதராஜ பெருமாள் என்றாலே காஞ்சிபுரம் தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும். இந்நிலையில், காஞ்சிபுரத்தை போன்றே நைனாமலை என்ற ஸ்தலத்திலும் அருள்புரிகிற வரதராஜ பெருமாளின் சிறப்புகளையும், அது எங்கே உள்ளது என்றும் அறிந்திடலாம்.

எங்கே உள்ளது?

கொங்கு நாட்டில் இருக்கின்ற எண்ணற்ற மலை கோயில்களில் சிறப்பு வாய்ந்த கோயிலாக நைனாமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ள காளப்பநாயக்கன் பட்டியில் இந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.

நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் புதன் சந்தையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் நைனா மலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

நைனா மலை

காக்கும் கடவுளான விஷ்ணு பகவானை, தந்தையாக கருதி வழிபடும் வழக்கம் உண்டு.

இந்நிலையில், தெலுங்கு மொழி பேசுபவர்கள், தங்கள் தந்தையை நைனா என்று கூறும் வழக்கம் உள்ளது.

அவ்வாறிருக்கையில், நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை தெலுங்கு மொழி பேசுகிற நாயக்கர்கள் ஆட்சி செய்தபோது, விஷ்ணு பகவானை, தந்தையாக கருதி இந்த மலையை நைனா மலை என்று அழைப்பதாக வரலாறு கூறுகிறது.

மேலும், பண்டைய காலத்தில் இந்த மலையில் ரிஷிகள் தவமிருந்து, வரதராஜ பெருமாளை தரிசித்து வந்தபோது, கன்மநையின மகரிஷி என்பவரும் தனது இறுதிகாலம் வரை வழிபட்டு வந்துள்ளார்.

கன்மநையின மகரிஷி இந்த மலையிலேயே சமாதி ஆனதால், இந்த மலைக்கு நைனா மலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு

இந்த மலைக்கோயில் இந்திர ஜாலம், பத்ம ஜாலம், யாதவா ஜாலம், நைனா ஜாலம் என்ற 4 பெயர்களுடன், 4 யுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிறப்புமிக்க மலையில் 108 தீர்த்தங்கள் இருந்த நிலையில், தற்போது, என்றும் வற்றாத தீர்த்தமாக 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது.

இக்கோயிலில் ஆனி முதல் தேதி முதல் ஆடி 30-ஆம் தேதி வரை சூரிய உதயத்தின்போது, சுவாமி மீது சூரிய ஒளி விழுவது சிறப்பாகும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, புரட்டாசி சனிக்கிழமைகளில் நைனா மலை வரதராஜ பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வது தனி சிறப்பாக கருதப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வந்து வரதராஜ பெருமாளை வழிபட்ட பின்னர், வீட்டிற்கு சென்று காய்கறி படையல் செய்து வழிபடுவது இப்பகுதியை சேர்ந்தவர்களின் வழக்கமாக உள்ளது.

இங்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு வேண்டியது நடப்பதாகவும்,

திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாகவும் இருப்பதால், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு எண்ணற்றவர்கள் வருகை புரிகின்றனர்.

திருஷ்டி மற்றும் தோஷங்களால் பாதிப்படைந்த தொழில்கள் சிறப்படைந்து நல்ல லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

நைனாமலைக்கு எதனால் அந்த பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது என்பதை எல்லோரும் அறிந்திட செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள்).



Follow Us on