2025-ஆம் ஆண்டின் முதல் சனி பிரதோஷம்

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால், ஒரு வருட பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். அதேநேரத்தில் சிறப்பு வாய்ந்த சனி மகாபிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால், 120 வருட பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதனால், 2025-ஆம் ஆண்டின் இன்றைய முதல் சனி மகாபிரதோஷ நாளில் சிவன் கோயிலுக்கு அவசியம் சென்று வணங்குவது நல்லது.

சிவராத்திரிக்கு இணையாக

பாற்கடலில் இருந்து அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கொண்டு கடைந்தபோது, வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய தினம் ஒரு சனிக்கிழமை பிரதோஷ நாளாகும்.

அதனால், சனி மகாபிரதோஷம், மகா சிவராத்திரி தினத்திற்கு இணையாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனவே, இந்நாளில் சிவபெருமானை விளக்கேற்றி வழிபட மிகுந்த செல்வமும், அனைத்து வளங்களும் கிடைக்கும்.

மேலும், சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும்.

விரதமிருப்பது எப்படி?

இந்நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, சிவ நாமத்தை உச்சரித்தபடியே காலை முதல் மாலை 6.30 மணி வரை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்றவற்றை படிப்பது நல்லது.

மதிய வேளையில் கண்டிப்பாக தூங்கக்கூடாது.

மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்தால்தான், சிவனருள் கிடைக்கும் என்பதில்லை, முடியாதவர்கள் அபிஷேக பொருட்களை பூஜைக்கு ஒழுங்குபடுத்தி கொடுப்பது கூட சிவத்தொண்டுதான்.

இறைவனை முழு உள்ளன்போடு கண்ணீர் மல்க வணங்கினால் போதும், பணம், பதவி, அதிகாரமெல்லாம் இறைவனிடம் செல்லாது.

யாருக்கு அருள் புரியவேண்டும் என்று இறைவனுக்கு தெரியும்.

எனவே, சாதாரண பிரதோஷ விரதத்தை விட, சனிக்கிழமையில் வரும் மகாபிரதோஷத்தன்று விரதமிருப்பதால், ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ வழிபாடு முடிந்ததும், கோயிலில் வழங்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

பலன்கள்

சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும், லட்சுமி கடாட்சத்தால் குபேர வாழ்வு அமையும்.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

கர்ம வினைகள் நீங்கி, கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

குடும்பத்தில் ஏற்படுகிற சண்டை சச்சரவு, கோபம் நீங்கும்.

சிவனருளால் பேரும், புகழும், செல்வாக்கும் கிடைக்கும்.

சனி மகாபிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட குபேர வாழ்வு கிடைக்கும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on