
ஆறுமுகனை வழிபடுவதற்கு உகந்த தினங்களாக சஷ்டி திதி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை போன்றவை உள்ளன. இதில், சஷ்டி தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதால், குழந்தைப்பேறு மட்டுமன்றி கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் கிடைப்பதுடன், அனைத்து நலன்களும் பெற்று சிறப்புடன் வாழலாம். அதையடுத்து, முருகப்பெருமான் எவ்வாறு மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.
குரு பகவானுக்குரிய
பங்குனி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, முருகன் படத்திற்கு வாசமிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றவேண்டும்.
கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற பாடல்களை படித்து வணங்க வேண்டும்.
இன்று உணவு எதுவும் சாப்பிடாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது சிறப்பாகும்.
உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து கடைபிடிக்க நன்மைகள் ஏற்படும்.
மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்கி, வீடு திரும்பியதும் பூஜை அறையில் உள்ள முருகனை வணங்கி நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இன்றைய சஷ்டி தினம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பாகும்.
சிறப்பு
சஷ்டியன்று முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும்.
ஏனெனில், முருகன் என்பதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்கியிருப்பதாக ஐதீகம்.
அதாவது, ‘மு’ என்பது ‘முகுந்தன்’ என்ற விஷ்ணுவையும், ‘ரு’ என்பது ருத்ரனாகிய சிவபெருமானையும், ‘க’ என்பது பிரம்மாவாகிய கமலோத்பவனையும் குறிப்பிடுகின்றது.
பங்குனி மாதத்தில்தான், முருகனுக்குரிய பங்குனி உத்திரம் வருவதன் காரணமாக இந்த மாதத்தில் வருகின்ற சஷ்டி தினமும் மகத்துவமிக்கதாக கருதப்படுகிறது.
இன்று பங்குனி வளர்பிறை சஷ்டி விரதமிருக்கின்ற குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, விரைவில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும்.
நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
முருகப் பெருமானுக்கு சஷ்டியில் தொடர்ந்து விரதம் இருக்க, மனக்கவலைகள் தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
மேலும், கவித்துவம், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், ஞானம் கிடைக்கும்.
முருகனிடத்தில் மும்மூர்த்திகளும் உள்ளனர் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).