
இன்றைய நவீன காலத்தில் அழகு என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் மிகவும் குறைவுதான். அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் பெண்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம் எப்போதும் குறையாது. உங்களை அழகு படுத்த அதிக செலவிலான கிரீம்களை பயன்படுத்துவதை காட்டிலும் மிகவும் சுலபமாக இயற்கையான முறையில் அழகு படுத்துவதற்கு மாதுளை பழம் பயன்படுகிறது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்வோம் வாருங்கள்.
மருத்துவ குணம்
மாதுளையின் தோல் ஆக்சிஜனேற்றம் கொண்டது.
இதன் தோலில் மட்டும் பழத்தை காட்டிலும் 50சதவீத சத்துகள் உள்ளது.
மாதுளையின் பழம், தோல், பட்டை, பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.
மாதுளையானது நைட்ரிக் ஆக்சைடு அதிகம் கொண்டது என்பதால், இப்பழம் மன அழுத்தத்தை குறைக்க கூடியது.
இப்பழத்தின் தோலை ஸ்கரப் வடிவில் தேய்க்கும் போது, முகத்தில் இறந்த செல்கள், கரும் புள்ளிகள் மற்றும் வெண் புள்ளிகள் மறையும்.
இப்பழம் முகத்தை பளபளப்பாக்கும் தன்மை கொண்டது.
உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும்.
வசீகரமாக்கும் அழகு
மாதுளையின் தோலை நன்கு பொடி செய்து இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் அவகேடோ எண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவினால் முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஸ்கிரப் செய்த பிறகு முகத்தில் மாயிஸ்சரைசர் போடுவது அவசியம்.
முகத்தை மிக அழகாக ஜொலிக்க வைக்கும் குறிப்புகள் அடங்கிய இக்கட்டுரையை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்.(ஷேர்)