download_indicator

மூட்டு வலி உள்ளவரா? தேவையான உணவுகள்

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இன்று மூட்டுவலியால் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் துயரடைந்து வருகின்றனர். வயது முதிர்வு என்றாலே முதலில் வரும் நோயில் முக்கியமானதாக மூட்டு வலி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளைஞர்களும் மூட்டுவலியால் அவதியடைகிறார்கள். உடலில் உள்ள மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு முழங்கால்களிலும், முழங்கைகளிலும் வலியை ஏற்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மூட்டுகளில் சுரக்கும் நீர் சீழாக மாறிவிடுவதாலும் வலி ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வீக்கமடைதல் மற்றும் எலும்புகளின் குருத்தெலும்பு பகுதி அழிக்கப்பட்டு சொர சொரப்பான எலும்பாக மாறிவிடுவதாலும் மூட்டுவலி ஏற்படுகிறது. மூட்டுவலி உடலில் உள்ள இதர பாகங்களான இடுப்பு, முதுகு, கழுத்து, விரல், கணுக்கால், மணிக்கட்டு, தோள்பட்டை என அனைத்து இடங்களிலும் வலியையும் உண்டாக்கும். மூட்டுவலி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில உணவு வகைகளை பார்க்கலாம்.

உணவுகள்

மூட்டு வலி இருப்பவர்களுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சத்து மிக அவசியம். அது பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளில் இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாது சத்துக்களும் இருக்கின்றன.

துரித உணவுகளில் வீக்கத்தை உருவாக்கும் ரசாயனத்தன்மை தோன்றும் என்பதால் அவைகளை சாப்பிட்டால் மூட்டு வலி அதிகமாகும். எனவே அத்தகைய உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் சி சத்துள்ள நெல்லிக்காய், ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, திராட்சை பழம் போன்றவைகளை சாப்பிட்டால் எலும்புகளும், தசையும் பலப்படும்.

எலும்பு பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள வழுவழுப்பான பொருள் எலும்புக்கு பலத்தை கொடுக்ககூடியது.

செம்பருத்தி பூவில் ரசம் வைத்து உணவில் சேர்த்துக் கொள்வது மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களுக்கு மிக நல்லது.

முருங்கை இலை சூப் தினமும் இருவேளை சாப்பிடுவது மூட்டு தொந்தரவால் அவதிப்படுகிறவர்களுக்கு ஏற்றது.

பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவைகளும் எலும்புக்கு பலத்தை அதிகரிக்க உதவும். இதனால் மூட்டு வலி போன்ற சிக்கல்கள் நீங்க உதவுகிறது.

மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் வெந்தய டீயைக் குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற வழி வகுக்கும்.

கிராம்புடன் சுக்கை சேர்த்து இடித்து, கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.

மூட்டு வலி மற்றும் மூட்டுகளின் உள்ளே காயங்கள் இருப்பவர்கள், இஞ்சி டீ குடித்து வந்தால் அனைத்து விதமான மூட்டு பிரச்சனைகளும் நீங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மூட்டு திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும் வீக்கத்தை குறைக்க மஞ்சள் கலந்த வெந்நீரை பயன்படுத்தலாம். இதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை கட்டுப்பட வாய்ப்புள்ளது. எனவே மூட்டு வலி உள்ளவர்கள் மஞ்சள் கலந்த சுடுநீரை அன்றாடம் பருகி வருவது நன்மையளிக்கும்.

சுக்கு, கிராம்பு இவற்றை கஷாயம் போட்டு மூன்று வேளை குடித்து வர கை, கால், மூட்டு வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது.

முடக்கத்தான் இலைகளோடு, சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் கொண்டு செய்யப்படும் நறுமணம் மிகுந்த முடக்கத்தான் இரசம், மலக்கட்டு முதல் மூட்டுவலி வரை நீக்க உதவும் செலவில்லா மருந்தாகும்.

சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறைந்து மூட்டு வலி குறைய வாய்ப்புள்ளது.

கால் டம்ளர் தண்ணீரில் சிறிதளவு கறுப்பு எள்ளை இரவு ஊறவைத்து, அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்பு பலப்படும். இதனால் மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு குறைவு.



Follow Us on