தற்போது திருமணம் நடைபெறுவது என்பது மிகவும் சிரமமான செயலாக உள்ளது. கலந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை கிடைப்பது, அரிதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் பெண் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே பெண் கிடைத்தாலும் பெண் பார்த்து, பொருத்தம் பார்த்து, பேசி முடிவு செய்து கழுத்தில் தாலி ஏறுவதற்குள் போதும், போதும் என்ற நிலை ஏற்படுகிறது. பெண் கிடைக்காத பட்சத்தில், தன்னைவிட இரண்டொரு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா? என்ற கேள்வி பலரிடம் வருகிறது.
ஜோதிட ரீதியாக
இதற்கு ஜோதிட ரீதியாகப் பார்த்தால், சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் இளமை, அழகு, வனப்பு ஆகியவற்றுக்கு உரிய கிரகங்கள் ஆகும் .
சந்திரன்
ஜாதகக் கட்டத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ராசி என்று சொல்வார்கள். சந்திரன்தான் ஒருவருடைய உடல் அமைப்பை அழகை தீர்மானிக்கக் கூடிய கிரகம். இளமையைக் குறிக்கக்கூடிய கிரகம்.
புதன்
புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சம் பெற்றோ இருந்தால், தேஜஸ்ஸாக இருப்பார்.
சுக்கிரன்
சுக்கிரன், ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால், அவர் கூட்டத்தில் தனித்துக் காணப்படுபவராக இருப்பார். நல்ல ஆளுமைப் பண்புமிக்கவராக இருப்பார்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், லக்னத்திலிருந்து 7-ம் இடம், 8-ம் இடம், அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும்.