
மூன்று கிரகங்கள் ஒரு ஜாதக கட்டத்தில் சேர்ந்து இருப்பதற்கு திரிக்கிரக யோகம் என்பது பெயராகும். இது பெரும்பாலான ஜாதகத்தில் காணப்படும் யோகமாக பார்க்கப்படுகிற நிலையில், அவ்வாறு இருந்தால் என்ன பலன்கள் யாருக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
யாருக்கு நன்மை
ஒரு ஜாதகத்தில் 2,5,9,10,11 ஆகிய அதிபதிகளில் யாரேனும் மூவர் சேர்ந்து ஒரே இடத்தில் சுப கிரக பார்வை பெற்று காணப்பட்டால் இந்த திரிக்கிரகம் யோகம் நன்மையை செய்யும். அதிலும் இவர்களில் யாரேனும் ஒருவர் உச்சம் அல்லது ஆட்சி பெற்று விட்டால் இன்னும் அபார நன்மைகளை இந்த யோகம் செய்யும். ஆனால், அதே சமயத்தில் மேற்சொன்ன 2,5,9,10,11 ஆகிய அதிபதிகள் 3,6,8,12 ஆகிய வீடுகளுக்கும் அதிபதிகளாக இருத்தல் கூடாது. அதைமீறி இருந்தால் இந்தத் திரிக்கிரக யோகம் நன்மையைச் செய்யாது.
பலன்கள், பாதிப்புகள்
அதே போல, 3,6,8,12 ஆகிய அதிபதிகளில் யாரேனும் மூவர் கூடி ஒரு கட்டத்தில் இருந்தால் இந்த திரிக்கிரகம் யோகம் பெரும் தீமையை செய்து விடலாம். அப்படி இந்த மூவரும் சேர்ந்து அது லக்கினமாக இருந்தால் ஜாதகரின் உடல் நிலை பாதிக்கப்படும்.
2-ம் இடமாக இருந்தால் செல்வம் சேராது. அதை விட கடன் அதிகரிக்கும்.
3-ம் இடமாக இருப்பின், உடன் பிறந்த உறவுகளுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
4-ம் இடமாக இருக்கும்போது, சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படும் அல்லது சரியான வீடு அல்லது வாகனம் அமையாது. வாழ்க்கையில் தன்னிறைவு அடைய காலதாமதம் ஆகலாம்.
5-ம் இடமாக இருக்கின்ற நிலையில் ஞாபக சக்தி குறையும், வெளிநாடு யோகம் கல்வி புகழ் தடைபடும். அவர்களுக்குப் பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்காது. அதனால் இந்த ஜென்மத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
6-ல் இருந்தால் கடன் பெருகும். ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
7-ம் இடமாக இருக்கும் பட்சத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையாமல் போகலாம்.
8-ம் இடமாக இருந்தால், மனம் போனபோக்கில் போவார்கள். நன்மை, தீமைகள் அறியாது எண்ணிய மாத்திரத்தில் எதையும் செய்து விட்டு வருந்துவார்கள்.
9-ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு நன்மையை செய்யாது. தந்தை வழியில் கூட வீண் விரோதங்கள் ஏற்படும்.
10-ம் இடமாக இருப்பின் தொழில் சரியாக அமையாது.
11-ம் இடமாக இருந்தால் தேவை இல்லாத முதலீடுகள் பண இழப்பை ஏற்படுத்தும்.
12-ம் இடமாக இருந்தால் வரவுக்கு மேல் செலவு ஏற்படும். பணம் கையில் தங்காது.
இவற்றுக்கு ஒரே பரிகாரமாக, தினமும் குறைந்தது 9 முறை கோளறு பதிகம் படிப்பதே சிறந்தது ஆகும்.
மூன்று கிரக யோகத்தால் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அறிந்திட வாழ்க்கை ஜாதகம் வாங்கி பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.