
மாதந்தோறும் வருகின்ற அமாவாசைக்கு பிறகு மூன்றாவது திதியன்று வரும் சந்திர தரிசனமே மூன்றாம் பிறை தரிசனமாகும். சிவபெருமான் தனது சிரசின் மீது இந்த மூன்றாம் பிறையைத்தான் அணிந்திருப்பதால், பிறை தரிசனம் மிக முக்கியமானதாக உள்ளது. அதனால், இந்த பிறை நிலவை காணும்போது எப்படி வழிபட வேண்டும் என்று அறிந்திடலாம்.
எதனால் சிறப்பு?
இந்து மதம் மட்டுமல்லாது, பெரும்பாலான பிற மதங்களும் அமாவாசைக்கு பிறகு தோன்றுகிற முதல் நிலவை புனிதம் வாய்ந்ததாக கருதுகின்றன.
ஏனெனில், அமாவாசைக்கு பிறகு வருகின்ற இந்த முதல் நிலா வானில் சில மணி நேரம் மட்டுமே இருக்கும்.
அதன் பிறகு மறைந்துவிடும், அதனால்தான், சிவபெருமான் இந்த மூன்றாம்பிறை நிலவை தனது சிரசில் சூடியுள்ளார்.
மற்ற நாட்களில் நிலவை வானில் காணும்போது சாதாரணமாகவே நன்கு தெரிவதுடன், மறுநாள் சூரியன் உதயமாகும் வரை காணமுடியும்.
ஆனால், இந்த நிலவை மிக மெலிதாக கூர்ந்து நோக்கினால் மட்டுமே நன்றாக தெரியும்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களாலேயே மூன்றாம்பிறை நிலா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
சந்திரனும், சாபமும்
சந்திரன் தனது 16 கலைகளையும் இழந்து அழகில்லாமல் போவான் என்று விநாயகரிடமும், தட்சனிடமும் சாபம் பெற்றான்.
அதையடுத்து, தனது சாபம் தீரவேண்டியும், மீண்டும் வானில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காகவும் சிவபெருமானை குறித்து சந்திரன் தவம் செய்து வேண்டினான்.
அதன் பலனாக, சிவபெருமான் அருளால் இழந்த அழகை சந்திரன் மீண்டும் பெற்றான்.
எனவேதான், மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்று கூறுகின்றனர். .
சிவபெருமான் மூன்றாம் பிறையை தனது சிரசில் சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார்.
இந்த பிறை நிலவை பார்வதி, விநாயகர் ஆகியோரும் சூடியிருப்பதால், இந்நிலவை வானில் காணும்போது வெறும் நிலவாக கருதி வணங்க கூடாது.
எப்படி வணங்குவது?
இரவு வருவதற்கு முன்பாக மாலை சுமார் 6:35 மணி முதல் 6:50 மணிக்குள் வானில் தோன்றுகின்ற பிறை சந்திரனை காணும்போது, 2 கை விரல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம என்று கூறி வணங்க வேண்டும்.
அதனால் வாழ்க்கை பிரகாசமடையும், மனம் அமைதிபெறும்.
பிறை சந்திரனை தரிசனம் செய்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும், ஆயுள் அதிகரிக்கும்.
வியாபாரம், தொழில், அலுவலக வேலை எல்லாம் சிறப்பாக அமைந்திடும்.
மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வருபவர்கள் வாழ்வில் நீங்காத செல்வ வளத்தை பெறுவார்கள்.
மேலும், மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, பிரம்மஹத்தி போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கும்.
சந்திரதோஷம் இருப்பவர்கள் இந்நாளில் விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்களும் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும்.
அதனால், இன்று தவறாமல் பிறை நிலவை தரிசித்து ஏற்றம் பல காணுங்கள்.
மூன்றாம் பிறையை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகளை உங்கள் நன்பர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.