மூக்கு சளி பழத்தை எங்கேயாவது பார்த்தீர்களா?
மூக்கு சளி பழத்தை எங்கேயாவது பார்த்தீர்களா என்றவுடன் வேடிக்கையாக உள்ளதல்லவா? உள்ளே உள்ள பழமும் அப்படிதான் இருக்கும். அதனால்தான் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் எங்கேயோ காணாமல் போய்விட்டது போல. அதனால்தான், மூக்கு சளி பழத்தை எங்கேயாவது பார்த்தீர்களா என்ற கேள்வியை வைத்துள்ளோம். தொலைந்து போகும் பழத்தை, தேடும் அளவிற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது? வாருங்கள் தேடுவோம்.
மூக்கு சளி பழம்
மூக்கு சளி பழத்திற்கு நறுவலி என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
குறைந்த சுவையுடைய இப்பழம் அதிக மருத்துவ குணம் கொண்டது.
சரக சம்ஹிதை என்ற மருத்துவ குறிப்பு புத்தகத்தில் நறுவலி பழம் இடம்பெற்றுள்ளது.
இப்பழத்தில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது.
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உண்ணக் கூடிய பழமாகும்.
அதிகமாக சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் புழுக்கள் ஏற்படும். அந்த குடற்புழுக்களை அழிக்கும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியது.
மேலும், மூட்டு தேய்மானம் உள்ளவர்கள் இதை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதை தவிர உடற் பருமன் குறைப்பு, சரும அழகு போன்றவற்றிற்கும் இவை பெரிதும் பயன்படுகிறது.