download_indicator

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அகத்தியரா?

மின்சாரம் இல்லாத வாழ்வை இன்றைக்கு மனிதர்களால் நினைத்து கூட பார்க்கமுடியாது. அந்தளவிற்கு வாழ்வின் அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற மின்சாரத்தை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அகத்திய முனிவர் கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார் என்பது பெரும் ஆச்சரியத்திற்கும், சாதனைக்கும் உரியதாகும். அதையடுத்து, அதன் விபரங்களை அறிந்திடலாம்.

மின்சாரம் என்றால் என்ன?

காந்தப்புலத்தின் நடுவில் ஒரு மின்கடத்தி சுழலும்போது உற்பத்தியாகிற சக்தியே மின்சாரமாகும்.

நிலக்கரி, நீர், சூரியன், காற்று இயற்கை எரிவாயு, அணுசக்தி போன்ற பல்வேறு ஆற்றல் மூலங்கள் ஜெனரேட்டரை இயக்கி, அதன் மூலம் மின்சாரத்தை உருவாக்குகின்றனர்.

இத்தகைய மின்சாரத்தைப்பற்றி, பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த தேல்ஸ் ஆஃப் மிலேட்டஸ் என்பவர், கி.மு. 600-ஆம் ஆண்டிலேயே ஆய்வு செய்த ஆரம்ப கால நபராக கருதப்படுகின்றார்.

அதன்பின்னர் வந்த, பெஞ்சமின் பிராங்க்ளின் (1706–1790), அலெஸாண்ட்ரோ வோல்டா (1745–1827), மைக்கேல் ஃபாரடே (1791–1867), தாமஸ் ஆல்வா எடிசன் (1847–1931) ஆகியோர் மின்சாரத் தயாரிப்பின் முக்கிய நபர்களாக இன்றைக்கும் கருதப்படுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு

இன்றைய காலத்திற்கு சுமார் 350 ஆண்டுகளாகத்தான் மின்சாரத்தின் பயன்பாடு பற்றியும், அதன் தேவைகள் பற்றியும் எல்லோரும் அறிந்துள்ளனர்.

ஆனால், சுமார் 30,000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே மின்சாரத்தை கண்டுபிடித்த அகத்தியர், அதுகுறித்து அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் நாளில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிரத்தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிரப்பி ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருன சக்தியைப் பெறலாம் என்று அகத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த மித்ரவருன சக்தி என்பதுதான் இன்றைக்கு மின்சாரம் எனப்படுகிறது.

மித்ரவருண சக்தி

அகத்திய முனிவர் குறிப்பிடுகிற மித்ரவருண சக்தி என்பதில், வருணன் என்றால் தண்ணீர் என்றும், மித்ரன் என்றால் சூரியன் என்றும் பொருளாகும். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் குறிப்பிடுகிறது.

ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் இருப்பதால், இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை பெறலாம்.

அவ்வாறு பெறப்படுகிற சக்தியே மித்ரவருண சக்தி என்று அகத்தியர் கூறுகிறார்.

இது எந்தளவிற்கு உண்மை என்பதை, 1891-ஆம் ஆண்டு புனேயில், Rao Saheb Krishnaji Vajhe என்பவர் ஆய்வு செய்து, 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current கிடைத்ததை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக அகத்திய முனிவர் கண்டுபிடித்த மின்சாரத்தை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் கண்டுபிடிப்பு என்று ஆங்கிலேயர்கள் கூறிவருவதை இந்தியர்கள் பலரும் நம்பி வருகின்றனர்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அகத்திய முனிவர் கூறிய வழிமுறைகளை இயற்பியல் விஞ்ஞானம் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on