மரு எதனால் வருகிறது? இதற்கு தீர்வுதான் என்ன?
மரபணுக் கோளாறின் காரணமாக மருக்கள் தோன்ற வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுத்து மற்றும் அக்குள் போன்ற பகுதிகளில் மருக்கள் வளரும். முதலில் பின் கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் அடர் கருப்பு நிறத்தில் மாறும். பின்பு அந்த இடத்திலேயே மருக்கள் தோன்றும்.
என்ன காரணம்
இது நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமாகவோ, அவற்றின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதாவது பருமன் காரணமாகவும், இன்சுலின் குறைபாடு காரணமாகவும் இவை தோன்றும். உடலில் இருக்கும் இன்சுலின் சுரப்பானது இரத்தத்தில் அதிகமாக இருந்தும், உடலிற்குத் தேவையான இன்சுலின் கிடைக்காது. இதனால்தான் நீரிழிவுக் காரர்களுக்கும் மருக்கள் தோன்றுகின்றன.
மருக்களை நீக்கலாமா?
மிக எளிதாக மருக்களை நீக்க முடியும். Electrocautery, Radio frequency முறையில் அகற்ற முடியும். லேசர் ட்ரீட்மென்ட்களே இல்லாமல் எளிதாக மருக்களை நீக்கலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு நீக்குவதால் குறைந்தது 5 முதல் 6 வருடங்கள் வரை மருக்களை வராமல் தடுக்க முடியும்.
வராமல் தடுக்க முடியுமா?
மரபணுக் கோளாறின் காரணமாக மருக்கள் தோன்றினால் அதை வராமல் தடுக்க முடியாது. சாதாரண மருக்கள் என்றால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இவற்றை வராமல் இருக்கச் செய்யலாம். சரியான உடற்பயிற்சியும் முறையான உணவுப் பழக்க வழக்கமும் இருந்தால் மருக்களைத் தடுக்க முடியும். இதன் மூலம் உடல் பருமன் பிரச்சனையிலிருந்து தப்பலாம்.
மரு எதனால் வருகிறது? இதற்கு தீர்வு என்ன செய்தார் என்பதை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கலாமே (ஷேர் செய்யுங்கள்).