மகாமக குளமும், மேரு மலையும்

கும்பகோணத்தில் இருக்கிற மகாமக குளமும், பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கிற மேரு மலையும் இந்துக்களின் மிக புனிதமான இடங்களாக கருதப்படுகிறது. அத்தகைய 2 புனிதமான இடங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று அறிந்திடுவோம்.

மேரு மலை

சொர்க்கலோகத்திற்கு செல்லும் படிக்கட்டாக மேரு மலை உள்ளதாகவும், பிரபஞ்சத்தின் மையத்தில் நிற்பதாகவும் பல்வேறு விதமாக மேரு மலையை பற்றி கூறுவதுண்டு.

எது எப்படி என்றாலும், மேரு மலை மிக புனிதமானது என்றும், அது தங்க மலையாக தெய்வங்களின் இருப்பிடமாக உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த மலையின் தெற்கு பகுதியில்தான் பாரதவர்ஷா எனப்படுகிற இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது.

அத்தகைய மேரு மலையின் உச்சிப்பகுதிகள் (Meru Peak) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாட்சி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது.

மகாமக குளம்

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் தீர்த்த யாத்திரை வந்து தீர்த்தமாடி செல்வது வழக்கம்.

இந்த மகாமக குளத்தில், மாசி மகத்தன்று நீராட வேண்டும் என்பது பலருக்கும் ஒரு பெரும் கனவாகவும், லட்சியமாகவும் இருப்பதுண்டு.

ஏனெனில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் வருவதால், அதன் மகத்துவமும், புனிதமும் கருதி நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அத்தகைய சிறப்பும், மகத்துவமும் நிறைந்த மகாமக குளத்தில் மகாமகத்தன்று நீராட முடியாவிட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

அதேபோல், மாசி மகத்தன்று மகாமக குளத்தில் நீராட வேண்டும் என்றும் அவசியமில்லை.

100 தடவை

மகாமக தினத்தன்று மகாமக குளத்தை சுற்றி வந்தால் கூட மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

மகாமக குளத்தை, மகாமக தினத்தன்று 1 முறை சுற்றி வந்தால் கூட, மேரு மலையை 100 தடவை சுற்றி வந்த பலன் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, 2 முறை சுற்றி வர சிவலோகத்தை சுற்றி வந்த பலன் கிடைக்கும்.

3 முறை சுற்றி வந்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

மகாமக தினத்தன்று மட்டுமல்ல, மகாமக குளக்கரையை எப்போதெல்லாம் சுற்றி வர முடியுமோ அப்போதெல்லாம் சுற்றி வருவது நல்லது.

அதனால், முடிந்தவரை சுற்றி வந்து இறைவனை தரிசித்து பாவங்களை போக்கி புண்ணியங்களை சேர்த்து கொள்வது நல்லதாகும்.

மகாமக தினத்தன்று, மகாமக குளத்தை சுற்றி வருவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை எல்லோரும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on