லக்கினத்திற்கு 4, 7-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பது நலமா?
பொதுவாக சந்திரனுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. தேய்பிறை காலத்தில் சந்திரன் பாவ கிரகமாக இருப்பார். இந்நிலையில் தேய்பிறை காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் 4 மற்றும் 7-ஆம் இடத்தில் இருந்தால் அது நன்மையை செய்யாது. அதன் தாக்கத்தால், நேரத்திற்கு உண்டு , உறங்க முடியாத நிலை இருக்கும். அதை விட 4-ஆம் இடம் தாய் ஸ்தானம் என்பதால் அந்த இடத்தில் சந்திரன் இருப்பது தாயாரின் உடல் நிலைக்கு நல்லதல்ல. வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூடத் தாமதம் ஆகலாம் அல்லது நம் விருப்பப்படி அமையாமல் போகலாம்.
வளர்பிறையில்
அதுவே வளர்பிறையில் பிறந்தவர்களுக்குச் சந்திரன் 4 மற்றும் 7-ஆம் இடத்தில் இருந்தால் பல நல்ல பலன்களைப் பொதுவாகச் செய்யும். சிலருக்கு காதல் திருமணம் கூட ஏற்படலாம். அழகான வாழ்க்கைத் துணை அமையலாம். எனினும் இதனை உறுதிப்படுத்த அவர்கள் (ஜாதகர்) எந்த லக்கினத்தில் பிறந்து உள்ளனர்? சந்திரன் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளார்? யாருடன் சேர்ந்து உள்ளார்? யாரால் பார்க்கப்படுகிறார்? போன்ற விவரங்களும் தேவை.
பரிகாரம்
தேய்பிறை காலத்தை விட வளர்பிறை காலத்தில் சந்திரன் 4 மற்றும் 7-ல் இருப்பது நல்லது தான். பொதுவாக ஜாதகத்தில் சந்திரனின் இருப்பிடம் அமைவது அவரவர் கையில் இல்லை என்றாலும், கெடுபலன் கொடுக்க கூடிய இடத்தில் இருந்தால், அதற்கு பரிகாரமாக திங்கள்கிழமை தோறும் கோயிலுக்கு இரவு வேளையில் சென்று சந்திரனை வழிபடுவது சிறப்பை கொடுக்கும்.
சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்கு என்ன பரிகாரம் செய்வது நல்லது என்பதை அடுத்தவர்கள் தெரிந்திட செய்யலாமே (ஷேர் செய்யுங்கள்).