தீய சக்திகளை விரட்டும் குப்பைமேனி செடி வழிபாடு

குப்பையாகிப் போன மனிதர்களின் உடல் நலத்தை சீராக்கி கொடுப்பதால்தான், குப்பைமேனி என்றழைக்கப்படுகிறது. இதற்கு அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி போன்ற பல பெயர்களும் உண்டு. இதை யாரும் வளர்ப்பதில்லை. தோட்டங்களிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் தானாகவே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சை பசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு, அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். குப்பைமேனி கசப்பு, காரச்சுவைகளும், வெப்பத்தன்மையும் கொண்டது. இதன் இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை குணப்படுத்த பயன்படுகின்றன. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். இந்த குப்பைமேனி செடியால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதையடுத்து அதன் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

குப்பைமேனி செடி வேருடன், ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்து வெறும் வயிற்றில், நெல்லிகாய் அளவு சாப்பிட வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும்.

குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும்.

தோல் நோய்கள் குணமாக, இதன் இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர வேண்டும்.

குப்பைமேனியின் இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவி வர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

குப்பைமேனி வேரைக் கழுவி சுத்தம் செய்து 1 லிட்டர் தண்ணீரில் இட்டு, நன்கு சுண்டக்காய்ச்சி, வடிகட்டி, குடிக்க பூச்சிகள் வெளியாகும்.

குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டு வர சளி வெளிப்படும்.

கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். தொற்று நோய்கள் உடலை தாக்காதவாறு காக்கிறது.

குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி மூட்டு வலியுள்ள பகுதிகளில் நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

உறவினர்களால் மற்றும் நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கஷ்ட நஷ்டங்கள், கடன் தொல்லை, தரித்திர நிலை, எதிரிகளின் தொல்லை, வம்பு வழக்குகள் அகல சனிக்கிழமைகளில் காலை 6 -7 மணிக்குள் குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி எடுத்து வேரை மட்டும் பூஜையில் வைத்து வணங்கி வர,மேற்சொன்ன அனைத்தும் விலகி ஓடும்.

குப்பைமேனி இலையை, ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் இருக்கும் வாயு தொல்லை நீங்கி, உடல் நலம் பெறும்.

குப்பைமேனி இலையை முறையாகச் சாப்பிட்டு வந்தால் நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலை, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி மூன்றையும் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும்.

கோர்ட், வழக்கு போன்றவற்றுக்கு போகும்பொழுதும், எதிரிகள் தொல்லை அதிமாகும் போதும் இதன் வேரை கையில் எடுத்து சென்றால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

குப்பைமேனியின் வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது சித்தர்கள் வாக்கு.

மருந்தை சாப்பிடும் காலங்களில், அவசியம் அசைவ உணவு, மது மற்றும் புகை போன்றவற்றை விலக்கி விடவேண்டும்.

தீய சக்திகளை விரட்டும் குப்பைமேனி செடி வழிபாட்டை உங்கள் உறவினர்கள் அறிந்திட செய்யலாமே (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on