download_indicator

குடியரசு தினத்திற்கான தேதி எவ்வாறு முடிவானது?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், அதிகளவில் இளைஞர்களை கொண்டிருக்கும் நாடாகவும் திகழ்கின்ற இந்தியாவில் இன்று 76-வது குடியரசு தின விழா மிக சிறப்பாக நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழா கொண்டாடுவதற்கான தேதி எப்படி, யாரால், எப்போது நிர்ணயம் செய்யப்பட்டது என்று அறிந்திடுவோம்.

எப்படி நிர்ணயம்?

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை அடைந்தபோது, இந்தியாவிற்கான தனி அரசியலமைப்பு இல்லை.

ஆனால், சுதந்திரத்திற்கு முன்பாகவே இந்தியா பூரண சுயராஜ்ஜியத்தை அடைய வேண்டும் என்று 1930 ஜனவரி 26-ஆம் தேதியன்றே தீர்மானிக்கப்பட்டது.

அதையடுத்து நாடு சுதந்திரமடைந்ததும் அரசியலமைப்பின் முதல் வரைவை நவம்பர் 4, 1947 அன்று நாடாளுமன்றத்தில் வரைவுக்குழு சமர்ப்பித்தது.

அதையடுத்து, அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை 1950 ஜனவரி 24-ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் வரைவுக்குழு நிறைவேற்றி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பதிப்புகளில் கையெழுத்திட்டது.

அப்போது, பூர்ண ஸ்வராஜ் தினத்தின் ஆண்டு விழா ஜனவரி 26 -ஆம் தேதி என்பதால், இந்த தேதியையே, குடியரசு தினமாக அறிவிக்கலாம் என்று தீர்மானம் செய்து வரைவுக்குழு அறிவித்தது.

அதையடுத்து, பூரண சுயராஜ்ஜியம் பெற்ற இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்ற பின்னர், இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றினார்.

அடையாளம்

சுதந்திர இந்தியாவின் உண்மையான உணர்வை குடியரசு தினம் பிரதிபலிக்கிறது.

குடியரசு தலைவர் முன்னிலையில் நடத்தப்படும் இராணுவ அணிவகுப்புகள், இராணுவ உபகரணங்களின் காட்சிகள் மற்றும் தேசியக்கொடி ஆகியவைகள் குடியரசு தினத்தின் முக்கிய அடையாளங்களாக கருதப்படுகிறது.

அதேபோல் இந்நாளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதப்படை மற்றும் பள்ளி மாணவர்களின் கொடியேற்றும் விழாக்கள் மற்றும் அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை கௌரவிப்பதும், ராணுவ வீரர்கள் மற்றும் குடிமக்களுக்கு வீரதீர விருதுகள் வழங்குவதும் குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

விருதுகள்

நாட்டில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய துணிச்சல் மிக்க குழந்தைகளுக்கு, இந்நாளில் குடியரசு தலைவரால் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், கலை, சமூக சேவை மற்றும் விளையாட்டு போன்ற 7 பிரிவுகளில் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்ற விருதுகளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் வழங்குகிறார்.

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக, இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்கிறார்.

இந்தியாவின் முதல் குடியரசு தினமான 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பில், இந்தோனேசியாவின் ஜனாதிபதி சுகர்னோ தலைமை விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினத்தின் அடையாளங்களாக எவை கருதப்படுகின்றன என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on