download_indicator

கோயில் வாழை மரத்தை வெட்டினால் இரத்தம் வருமா?

மரங்கள் ஒவ்வொன்றிலும் பூ போக்கும் காலம் வரும்போது அவற்றில் பால் சிறப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த நேரத்தில் மரத்தின் பட்டைகளை கீறினால் அதிலிருந்து பால் வடியும் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில், எந்த ஊரில் உள்ள கோயில் வாழை மரத்தை கீறிட மனிதர்களுக்கு வருகின்ற இரத்தம் போன்றே திரவம் சுரக்கிறது என்றும், அதன் சிறப்பு குறித்தும் அறிந்திடுவோம்.

எந்த ஊர் கோயிலில்?

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்களம்பூர் என்ற ஊரில் இருக்கும் கதலிவனேஸ்வரர் கோயிலில் இருக்கின்ற வாழை மரத்தில்தான் இரத்தம் போன்றே பால் வடிகிறது.

‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால், இங்குள்ள சுவாமிக்கு ‘ஸ்ரீகதலிவனேஸ் வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்ற பெயர் உள்ளது.

800 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இந்த கோயிலில், வீற்றிருக்கும் மூலவர் தீராத நோய்களையும் தீர்த்து வைப்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

முல்லைவனத்தலம் திருக்கருக்காவூர், பாதிரிவனத்தலம் திருஅவளிவநல்லூர், வன்னிவனத்தலம் அரித்துவார மங்கலம், பூளைவனத்தலம் ஆலங்குடி, வில்வ வனத்தலம் திருக்களம்பூர் என்ற பஞ்சாரண்யத் தலங்களுள் இத்தலம் ஐந்தாவதாக உள்ளது.

வேறு எங்கும் வளராது

இங்குள்ள மூலவர், சுயம்புலிங்கமாக இருப்பதுடன், அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்பு மரங்களே ஆகும்.

இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவதில்லை. மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளரும் வாழை மரங்களாகும்.

இந்த வாழைக்கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது.

அதேபோல், வெளியிடத்திலிருந்து வாழைக் கன்றுகளை கொண்டுவந்து கோயிலுக்குள் வைத்தாலும் வளராது.

இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சுவாமிக்கு படைக்காமல் சாப்பிடக் கூடாது, அதை மீறி சாப்பிட்டால் வெண்குஷ்டம் வரும்.

இரத்தம் போன்று

இக்கோயிலில் உள்ள வாழை மரங்களில் விளையும் வாழைப்பழத்தை பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.

அவ்வாறு சாப்பிட உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும் என்பது நம்பிக்கை.

இந்த அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட நாள் முழுவதும் பசியே எடுக்காது.

இங்குள்ள வாழை பழங்கள் பார்ப்பதற்கு மலைப்பழம் போன்றிருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போலிருக்கும்.

அதேபோன்று, இந்த வாழை மரத்தை வெட்டினால் அல்லது கீறினால் மனிதர்களுக்கு வருவதுபோல் சிவப்பு வண்ண இரத்தம் போன்று திரவம் வெளிவரும். அதனால், இவை செவ்வாழையுமல்ல.

இத்தகைய சிறப்பு திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் தவிர வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் உடலில் இரத்தம் வருவது போன்ற திரவம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் கோயில் வாழை மரத்தில் வருவது பற்றி உங்கள் மனம் கவர்ந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on