எந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?

மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் வாரத்தில் இருக்கும் ஏழு கிழமையில் ஏதாவது ஒரு கிழமையில் தான் பிறந்திருக்க முடியும். பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் குணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதையடுத்து, எந்தக் கிழமையில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட குணநலன்களைப் பெற்றிருப்பார்கள் என்றும், ஒவ்வொரு கிழமைக்கும் யாரை வழிபட வேண்டும் என்றும் பார்க்கலாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயல்படுபவர்.

பிறரால் செய்ய முடியாத காரியங்களை, இவர்கள் சாதாரணமாக செய்து முடிக்கும் திறன் கொண்டிருப்பார்கள்.

நீதி, நேர்மையைக் கடைபிடிப்பவர்களாக இருப்பர்.

கலைத்துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

நேர்வழியில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் திங்கள் தோறும் அம்பிகையை வழிபடுவதோடு, பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்தால் அதிக பலன்களைப் பெறலாம்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வீரமும், விவேகமும் மிக்கவர்களாக இருப்பர்.

எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் விடமாட்டார்கள்.

எதையும் எதிர்த்துப் போராடும் வலிமை பெற்றவர்கள்.

பிறரிடம் ஆலோசனைக் கேட்டாலும் தான் எடுத்த முடிவையே இறுதியில் செயல்படுத்துவர்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் சஷ்டி விரதமிருந்து சண்முகனை வழிபட்டால் சகல பாக்கியங்களையும் பெற முடியும்.

புதன்கிழமை

புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாதுரியத்துடன் விளங்குவர்.

அடுத்தவர்களுக்கு யோசனை சொல்வதில் திறமைசாலிகள்.

புதுமையை விரும்பினாலும், பழமையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

சங்கீதம் கலை, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர்கள், வரவறிந்து செலவு செய்வார்கள்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபடுவது நல்லது.

வியாழக்கிழமை

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருப்பர்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வர்.

கூர்மையான அறிவும், எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும் பெற்றவர்கள். தெய்வபக்தி மட்டுமல்லாமல், தேசபக்தியும் இவர்களிடம் அதிகம் உண்டு.

பொதுநலத்தில் புதிய பொறுப்புகள் இவர்களிடம் தானாகவே தேடிவரும்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வியாழன்தோறும் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அழகாக பேசுவதுடன், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் குறைவில்லாச் செல்வங்களைப் பெற்று வாழ்பவர்கள்.

கலை, இலக்கியம், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும்.

உடன் இருப்பவர்கள், இவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் படியான நிலைமையை உருவாக்குவர்.

சகல விஷயங்களும் தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லும் பொழுது தெரியாததைப் போலவே கேட்பார்கள்.

முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வநிலை உயரும்.

சனிக்கிழமை

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றி பெறும் குணம் இருக்கும்.

தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், எதற்காகவும் கலங்கமாட்டார்கள்.

பிறருக்கு கட்டளையிடும் சக்தியைப் பெற்றிருப்பர்.

இவர்களுக்கு நீடித்த நட்பும் இல்லை, நீடித்த பகையும் இல்லை.

இரக்கமற்றவர்களைப் போல தோற்றமளித்தாலும் இனியகுணம் கொண்டவர்கள்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் சனிக்கிழமைதோறும் விரதமிருந்து விநாயகப் பெருமானையும், சனிபகவானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும்.

செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.

மற்றவர்களை எடைபோட்டுப் பார்க்கும் திறன் பெற்றவர்கள்.

உல்லாசப் பயணத்தில் பிரியம் கொண்டவராக இருப்பார்கள்.

செய்தித்தாள், திரைப்படம், அரசியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடன் இருப்பார்கள்.

வழிபாடு

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து, சூரியனை வழிபட்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.



Follow Us on