கிருத்திகை நாளில் கூற வேண்டிய மந்திரம்

முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவே, கிருத்திகை நட்சத்திரம் சிறப்பாக கருதப்படுகிறது. இதன் நினைவாகவே, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதனையடுத்து, கிருத்திகை நாளின் சிறப்புகள் மற்றும் கூற வேண்டிய மந்திரங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

கிருத்திகை சிறப்புகள்

நாரத மகரிஷி பன்னிரண்டு ஆண்டுகள் கிருத்திகை விரதத்தை கடைபிடித்தே தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து தானம் செய்பவர்களுக்கு அளவற்ற நன்மைகள் கிடைக்கும்.

விரதம்

கிருத்திகை விரதத்தின் போது உப்பு இல்லாத உணவு உட்கொள்வது சிறந்தது.

கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகனின் பாடல்களை கிருத்திகை விரத நாளில் படிக்கலாம்.

அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகை நாளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெறும்.

கூற வேண்டிய மந்திரம்

'ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

மஹாதபாயை தீமஹி

தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்'

முருகன் கோயிலுக்கு சென்று இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது, இந்த மந்திரத்தை 9 முறை கூறி, 9 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் இவ்வாறு செய்து வந்தால், முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பலன்கள்

நிறைவான அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், கீர்த்தி போன்றவை கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கவலைகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல வாழ்க்கைத் துணை, குணமுள்ள பிள்ளைகள் கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்ற பாதகங்கள் நீங்கும்.

பிறருடன் ஏற்பட்ட பகை நீங்கி சமாதானம் ஏற்படும்.

உடன்பிறந்த சகோதரர்களுடன் சொத்து பிரச்சனைகள் நீங்கி சுமூக தீர்வு ஏற்படும்.

கல்வியில் சுறுசுறுப்பை பெற குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள்.

நாரத மகரிஷிக்கும் கிருத்திகைக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். (ஷேர்)



Follow Us on