
ஒருவரின் பூர்வ ஜென்ம வினைப்பயன்களால்தான் தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்களில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது செவ்வாய் தோஷமாகும். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களாக ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் என மொத்தம். 63 வகையான கிரக தோஷங்கள் இருக்கின்றன. இதில், யார் ஒருவருக்கு எந்த தோஷத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறதோ அதற்கான மந்திரத்தை வீட்டில் கூறி வழிபட்டு வருவது சிறந்தது. மேலும், அதற்குரிய பரிகாரத்தை அதற்கான கோயிலுக்கு சென்று செய்வதால் சிறந்த நிவர்த்தி கிடைக்கும். அதையடுத்து, கிரக தோஷங்கள் நீங்குவதற்கான சில மந்திரங்களை பார்க்கலாம்.
ராகு, கேது, சனி தோஷத்திற்கு
நவக்கிரகங்களில் சோதனைகளை அதிகம் கொடுக்கும் கிரகங்களான “ராகு, கேது, சனி” கிரக தோஷங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஆஞ்சநேயரின் மந்திரத்தை கூறலாம்.
“அஞ்ஜனா கர்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரம்மச் சாரினாம்
துஷ்ட கிரஹ விநாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே"
ஆஞ்சநேயரின் மந்திரத்தை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக ஆஞ்சேநேயர் கோயிலுக்கு சென்று, எலுமிச்சம் பழ விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி 108 முறை கூறி ஆஞ்சநேயரை வழிபடவேண்டும்.
மேலும், சனிக்கிழமைகளில் உளுந்தையும், வெல்லத்தையும் ஏதேனும் ஒரு ஏழைக்கு தானம் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆஞ்சநேயரின் பூரண அருள் உங்களுக்கு கிடைத்து உங்கள் கிரக தோஷம் நீங்கும்.
செவ்வாய் தோஷத்திற்கு
யோகீஸ்வரோ மஹாஸேன; கார்த்திகேயோக்னி நந்தன:
ஸ்கந்த: குமார: ஸேனானீ ஸ்வாமீ சங்கர ஸம்பவ:
காங்கேய ஸ்தாம்ர சூடச்ச ப்ரஹ்மசாரி சிகித்வஜ
தார காரிருமா புத்ர: க்ரௌஞ்சாரிச்ச ஷடானன:
ஸப்தப்ரஹ்ம ஸமுத்ரஸ்ச ஸித்த: ஸாரஸ்வதோ குஹ:
ஸனத் குமாரோ பகவான் போக மோக்ஷ பலப்ரத:
ஸரஜன்மா கணாதீச: பூர்வஜோ முக்திமார்க க்ருத்
ஸர்வாகம ப்ரணேதா ச வாஞ்சிதார்த்த ப்ரதர்சன:
அஷ்டாவிம்சதி நாமானி மதீயானீ தியபடேத்
ப்ரத்பூஷம் ஸ்ரத்தயா யுக்தோ மூகோ வாசஸ் பதிர்ப்பவேத்
மஹா மந்த்ரமயானீதி மம நாமானு கீர்த்தனம்
மஹா ப்ரக்ஞா மவாப்னோதி நாத்ர கார்யா விசாரணா
இதி ஸ்ரீ ருத்ரயாமளே ப்ரக்ஞா விவர்தனாக்யம்
ஸ்ரீமத் கார்த்திகேய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு முன்பாக விளக்கேற்றி வழிபடும்போது 11 முறை கூற வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு நீங்குவதை கண்கூடாக பார்க்கலாம்.
புதன் தோஷத்திற்கு
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்
இந்த மந்திரத்தை புதன் கிழமை தோறும் நவக்கிரகங்களில் உள்ள புதன் பகவானுக்கு முன்பாகவோ அல்லது விஷ்ணுவுக்கு முன்பாகவோ விளக்கேற்றி வழிபட்டு 17 முறை கூறி வர புதன் கிரகத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.