
ஒருவருடைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பொருளாக இருக்கும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் காலை முதல் மாலை வரை பாடுபடுகிறோம். பணம் இருந்தால் தான் நம்மை பிறர் மதிக்கவும் செய்வார்கள். அப்படிப்பட்ட இந்த பணம் பலரிடமிருந்தும் தெரியாமல் கீழே விழுந்து விடுவது உண்டு. இந்நிலையில், கீழே கிடக்கும் பணத்தை எடுப்பதால் நல்லதா, கெட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.
பயம்
சில சமயங்களில் சாலைகளில் எங்காவது கீழே பணம் கிடைத்திருக்கும். அப்படி பணம் கிடைத்தால் ஏதாவது தீமை நடக்குமா என்று சிலருக்கு பயம் வந்திருக்கலாம். சிலநேரங்களில், அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த பணத்தை நாம் எடுத்தால் அவர் நமக்கு சாபம் விட்டு விடுவாரோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும்.
மகாலட்சுமி
ஆனால், உண்மையில் பணம் என்பது தீமையை ஏற்படுத்தும் பொருள் அல்ல. ஏனென்றால் பணம் மகாலட்சுமியின் அம்சம். அப்படிப்பட்ட பணம் கீழே கிடந்து நமக்கு கிடைத்தால் அது பூமாதேவியின் வரமாக தான் பார்க்க வேண்டும். அதனால் சாலைகளில் பணம் அல்லது நாணயம் கிடந்தால் அதை எந்த தயக்கமும் இன்றி தைரியமாக எடுக்கலாம். இந்நிலையில், கீழே கிடந்த பணம் யாருடையது என்று தெரியாமல் இருக்கும் வரை அதை உங்களுக்கு சொந்தமானதாக கருதலாம். ஆனால், யாருடையது என்பது தெரிந்துவிட்டால் அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவது பெரும் புண்ணியத்தை நமக்கு கொடுக்கும்.
கோயிலில்
கீழே கிடந்த பணத்தை பயன்படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தால், அதை கோயில் உண்டியலில் காணிக்கையாக போட்டு விடலாம். அல்லது, ஆதரவற்றவர்கள், முதியோர்கள் வசிக்கும் கருணை இல்லங்களில் சேர்த்து விடலாம். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கும், உங்கள் தலைமுறைக்கும் புண்ணியம், நன்மை கிடைக்கும்.