download_indicator

கேது தசை எப்போது நன்மை செய்யும்?

'பொதுவாக ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவை போல கெடுப்பவனும் இல்லை' என்று ஜோதிடத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில்

ராகு கொடுத்துக் கெடுப்பான்.

கேது கெடுத்துக் கொடுப்பான்.

என்பதாகும்.

ராகு

ராகு நல்ல இடத்தில் இருக்கும் போது நிறைய செல்வத்தை தருவான். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவான்.

ராகு நல்ல இடத்தில் இருப்பவர்கள் நெளிவு, சுளிவுகளை நன்கு கற்றவர்கள். பொதுவாக ரிஷபம், கடகம் போன்ற இடங்களில் ராகு இருப்பது, மற்றும் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6-ஆம் இடத்தில் ராகு இருப்பது போன்றவை ஒருவருக்கு யோகத்தை தரும்.

லக்கினத்தில் ராகு இருந்தாலோ அல்லது சந்திரனுடன் ராகு சேர்ந்து காணப்பட்டாலோ அதிலும் அந்த லக்கினம் ரிஷபம் அல்லது கடகமாக இருந்தால் எப்போதும் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அதே சமயத்தில் சில தீய பழக்கத்தால் குஷ்டம், தொழுநோய்கள், தோல் வியாதிகள் போன்ற வியாதிகள் ஏற்பட்டு விடும். இப்படியாக ராகு கொடுத்துக் கெடுப்பான்.

கேது

கேது உச்சமாக இருக்கும் போது (கேதுவுக்கு உச்ச வீடு பொதுவாக விருச்சிகம் என்பார்கள்) வறுமையை அது ஏற்படுத்தி விடும்.

'கொடிது, கொடிது இளமையில் வறுமை' என்பார்களே. அந்த வறுமைக்கு காரணகர்த்தாவே கேது தான்.

ஒரு கட்டத்தில் வறுமை வெறுமைக்கு வழிவகுத்து ஞானத்தை பிறப்பிக்கும்.

இதனால் இளமையில் பட்ட கஷ்டம் எதிர் காலத்தில் பணத்தை பத்திரப்படுத்தச் சொல்லும்.

பிற்பகுதியில் அல்லது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் சொகுசு வாழ்க்கையே வந்தாலும் அதில் பிடிப்பு இருக்காது.

தாமரை இலையும் தண்ணீரும் போல இருப்பார்கள். இதனால் தான் கேதுவை ஞானகாரகன் என்றும், கெடுத்துக் கொடுப்பான் என்றும் சொல்வார்கள்.

கேது தசை நன்மைகள்

விருச்சிகத்தில் கேது இருந்தால் மட்டுமே கேது தசை நன்மையை செய்யும்.

குருவுடன், கேது இணைந்து ஜாதகத்தில் காணப்பட்டால் முற்பகுதி சோதனைகளை தரும் ஆனால் பிற்பகுதி சோதனைகளை சாதனையாக மாற்றும்.

கேது 8-இல் இருப்பவர்கள் விலங்குகள் மற்றும் விபத்துக்களால் கேது தசையின் சமயத்தில் படுகாயம் அடைய நேரிடலாம்.

கேது தசையில் திருமணம் ஒருவருக்கு கைகூடினால் அந்தத் திருமணம் பல வித அவமானத்திற்கு இடையே தான் நடைபெறும்.

கேது தசையில் ஒருவர் தொழில் தொடங்கினால் நிச்சயம் அந்தத் தொழில் நன்மையை செய்யாது.

கேது தசை சந்நியாசிகளுக்கு மட்டுமே அதிக நன்மைகளை செய்யும். கோயில் திருப்பணிகளை உண்மையாக எடுத்துச் செய்பவர்கள், ஆன்மீக வாதிகள் என இவர்களுக்கு மட்டுமே கேது தசை நன்மையை செய்யும்.

குரு + கேது, சுக்கிரன் + கேது சேர்ந்து இருந்தால் கேது தசையில் ஒரு சில நன்மைகளை ஏமாற்றம் இல்லாமல் கொஞ்சம் எதிர்பார்க்கலாம்.

பெரும்பான்மையானவர்களை கேது தசை ஒன்றும் இல்லாமல் தான் ஆக்கி இருக்கிறது. கேது தசையின் சமயத்தில் விநாயக வழிபாடு, சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்பது நன்மை செய்யும்.

உங்கள் ஜாதகப்படி கேது தசை எப்போது நன்மை செய்யும் என்பதை அறிந்துகொள்ள வாழ்க்கை ஜாதகம் வாங்குவதற்கு இங்கே அழுத்தவும்

கேது தசையால் ஏற்படும் நன்மைகளை கூறும் இக்கட்டுரையை உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள்.(ஷேர்)



Follow Us on