download_indicator

கஷ்டங்களை தீர்க்கும் கார்த்திகை தேய்பிறை சஷ்டி

முருகப்பெருமானுக்கு விரதமிருக்க உகந்த திதியாக சஷ்டி திதி கருதப்படுகிறது. ஏனெனில், சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதையடுத்து, கார்த்திகை தேய்பிறை சஷ்டி விரதத்தின் பலன்கள் குறித்து அறிந்திடலாம்.

சஷ்டி சிறப்பு

6 தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றியதால், அவருக்கு எல்லாமே 6 என்ற அடிப்படையிலேயே உள்ளது.

முருகனின் மந்திரம் 6 அட்சரங்கள் கொண்ட சரவணபவ என்பதாகும்.

முருகனுக்குரிய சொந்த வீடுகளாக 6 படை வீடுகள் கருதப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் விட 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனை, அன்னை பார்வதி ஒன்றிணைத்தபோது 6 முகங்கள் கொண்டவராக முருகப்பெருமான் திகழ்ந்தார்.

ஜாதக ரீதியாகவும் 6-ஆம் இடம் கடன், விரோதம், சத்ரு போன்றவைகளை குறிக்கின்ற நிலையில், இவைகளை எல்லாம், ஒரு நொடியில் போக்குபவராக முருகன் திகழ்கின்றார்.

இவ்வாறாக 6-ஆம் எண்ணுக்குரியவராக முருகன் இருப்பதாலேயே, திதிகளிலும் 6-வது திதியான சஷ்டி திதி முருகனுக்குரியதாக உள்ளது.

அதனால்தான், சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வணங்கிட அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார்.

விரதம்

இன்றைய கார்த்திகை தேய்பிறை சஷ்டியன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு மனமுள்ள மலர்களை சாற்ற வேண்டும்.

நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றி ஏதாவது இனிப்புகளை நைவேத்தியம் செய்திட வேண்டும்.

இந்நாளில் காலை முதல் மாலை வரை விரதமிருந்து, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாடி வணங்க வேண்டும்.

மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கி வீடு திரும்பியதும் விரதத்தை முடிக்கலாம்.

அவ்வாறு விரதமிருந்து வழிபட தடைபட்டு வரும் திருமணம் நல்ல வரன் கிடைத்து விரைவில் நடைபெறும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும்.

தொடங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும், தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

முருகப்பெருமானுக்கு எதன் காரணமாக எல்லாமே 6 என்ற அடிப்படையில் உள்ளது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on