கர்ப்ப தோஷம் எதனால் வருகிறது?
லக்கினத்திற்கு நான்காவது வீடு மேஷம் அல்லது விருட்சிகமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு கர்ப்ப தோஷம் ஏற்படும். அதேபோல், சிம்ம லக்கினம், மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் கர்ப்ப தோஷம் ஏற்படுவதுண்டு. அதையடுத்து, கர்ப்ப தோஷம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மற்றும் அதற்கான பரிகாரம் குறித்தும் காணலாம்.
தோஷ பாதிப்பு
பொதுவாகவே லக்கினத்திற்கு நான்காவது வீடு சுகஸ்தானம். இது புண்ணிய கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவர்களின் வீடுகளாக அமைந்து விட்டால் பிரச்சனை இல்லை. ஜாதகர் பெரும்பாலும் சுகவாசியாக இருப்பார்.
அதுவே சனி, செவ்வாய், சூரியன் ஆகியவர்களின் வீடுகளாக அமைந்து விட்டால் ஜாதகரால் நேரத்திற்கு சாப்பிட, தூங்க முடியாது.
அதுவே லக்கினத்திற்கு நான்காவது வீடு செவ்வாயின் ஆட்சி வீடாக வந்தால் அந்த ஜாதகத்தை கர்ப்ப தோஷமுள்ள ஜாதகம் என்று கூறுவார்கள். கர்ப்ப தோஷம் இருக்கும் பட்சத்தில், பிள்ளைகள் தொடர்பான கவலைகள் வாழ்நாள் முழுவதும் ஏற்படும். பிள்ளைகள் பிறக்க தாமதம் ஆகலாம். மேலும், பிள்ளைகள் ஆரோக்கியமின்றி போகலாம்.
தோஷ நிவர்த்தி பரிகாரம்
இதற்கு பரிகாரமாக 27 செவ்வாய் கிழமைகளில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமானை பக்தி, சிரத்தையுடன் வழிபட சந்ததி விருத்தி அடையும்.
செவ்வாய் கிழமையில் முருகப் பெருமானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, சஷ்டி கவசம் படித்து வர வேண்டும்.
முதல் செவ்வாய் கிழமை மட்டும் சிவப்பு வஸ்திரம் சாற்றினால் போதும்.
அடுத்தடுத்து வரும் 26 செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் படித்துவர கர்ப்ப தோஷம் நிவர்த்தி ஆகும்.
மேலும், 27-வது கடைசி செவ்வாய் கிழமையில் விரதத்தை முடித்து சிறுவர்களுக்கு இனிப்புகள், கல்வி உபயோகப் பொருள்கள் போன்றவற்றை வழங்கலாம்.
கர்ப்ப தோஷம் ஏற்பட்டால் என்ன பாதிப்பு அதற்கான பரிகாரம் போன்று, உங்கள் ஜாதகத்தில் என்ன தோஷங்கள் இருக்கிறது, அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து அறிந்திட உங்கள் வாழ்க்கை ஜாதகத்தை வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப தோஷம் என்றால் என்னவென்றே தெரியாத உங்களுடைய நண்பர்களுக்கு இக்கட்டுரையை பகிருங்கள்.(ஷேர்)