கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்?

கனவு வருவது என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இயல்பாக வருவதாகும். சிலர் எப்போதும் மனதில் நல்ல விஷயங்களை மட்டும் நினைத்து கொண்டிருக்கும் போது, அது அவர்களின் கனவில் பிரதிபலித்து நல்ல கனவாக மட்டுமே வருவதுண்டு. கெட்ட சகுனம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்கு கனவில் எப்போதும் கெட்ட விஷயங்கள் மட்டுமே நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், எப்போதும் இறைவனை மட்டுமே மனதில் நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு கனவில் இறைவன் காட்சி தருகிறார். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்குமே ஒவ்வொரு அர்த்தம் இருப்பதையடுத்து, நாம் காணும் கனவானது இரவு 1 மணி அளவில் வந்தால், அவை ஒரு வருடம் கழித்து பலிக்கும் என்று. இரவு 2 மணிக்கு கனவு வந்தால் அந்த கனவானது 3 மாதத்தில் பலிக்கும். அதிகாலையில் காணும் கனவிற்கு பலன் உடனே கிடைக்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இப்போது, கனவுகளில் எந்த கடவுள் வந்தால் என்ன மாதிரியான என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கனவில் சிவலிங்கம் வந்தால் தொடர்ச்சியான தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றாகும்.

முருகன் வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றாகும்.

விநாயகர் வந்தால் புதிதாக தொடங்கும் வேலையில் நல்லனவையே நடக்கும் என்றாகும்.

பெருமாள் வந்தால் புதிதாக தொடங்கும் தொழில் நன்கு வளரும்.

விஷ்ணு பகவான் வந்தால் நாம் செல்வந்தர் ஆவோம்.

அம்பாள் கனவில் வந்தால் வீட்டில் நல்ல சுப காரியங்கள் நிகழும்.

குலதெய்வம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மேலும் நல்ல சுபிட்சம் வ௫வதை குறிக்கிறது.

யானை துரத்துவது போல கனவு கண்டால் விநாயக௫க்கு ஏதோ நீங்கள் செய்ய வேண்டியது பாக்கி உள்ளது என அர்த்தம்.

கோயில் கோபுரம் வந்தால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி விட்டது போலவும் நல்ல நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்றும் அர்த்தமாகும்.

கடவுள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் குறை இன்றி, நல்லது உண்டாகும் என்பதாகும்.



Follow Us on