
கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து கள்ளக்காதலனுடன் பெண் ஓடினாள், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டி கொலை செய்த பெண், கணவனுக்கு தெரியாமல் 3 பேர்களுடன் உல்லாசமாக இருந்த பெண் என்பது போன்ற செய்திகள்தான் இன்றைக்கு அதிகளவில் கேட்கமுடிகிறது. அவ்வாறு கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை கருட புராணம் கூறுவதை அறிந்திடலாம்.
சிற்றின்பம்
கணவன், மனைவிக்குள் நடக்கும் தாம்பத்திய உறவே அளவாகவும், ஒரு வரைமுறைக்குள்ளாகவும் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.
எதுவுமே ஒரு அளவாக இருந்தால்தான் நன்றாக இருக்கும், அதனால்தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று தமிழில் பழமொழியே கூறப்படுகிறது.
அந்த வகையில் சிற்றின்பமாக கருதப்படுகின்ற கணவன், மனைவி உறவு ஒரு எல்லைக்குள் இருக்கவேண்டும்.
அதேநேரத்தில் உறவு முறையை மீறி மாற்றான் மனைவி, கணவனுடன் உறவு கொள்வது தவறாகும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், உறவுமுறையை மீறிய பந்தத்தில் ஆண், பெண் இருவரும் சம்மதித்து கள்ள உறவு கொள்வது சட்டரீதியாக வேண்டுமானால் தவறில்லாமல் இருக்கலாம்.
ஆனால், அதை இந்து மதம் தவறு என்று கூறுவதுடன், அதனால் பாவம் விளையும் என்றும் கூறுகிறது.
எனவே சிற்றின்பத்தின்மீது அதிக மோகம் கொள்ளாமல் இருப்பதே பல வழிகளிலும் நல்லது என்று சாஸ்திரம் கூறுகிறது.
துரோகம் செய்தவள்
மகிஷ்மாந்தா என்ற ஊரை சேர்ந்த சந்திரகாந்தா என்பவள், கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கேற்ப, விலைமாது பெண்ணுடன் நட்பு கொண்டதன் விளைவாக தனது இனிய இல்லற வாழ்வை தொலைத்து
சகதியில் விழுந்து புரண்டு அவளும் விலைமாது ஆகினாள்.
கணவனுக்கு துரோகம் செய்த சந்திரகாந்தாவின் நடவடிக்கையை கண்டு வேதம் ஓதும் அந்தணரான அவளது கணவன் அவளை விட்டு விலகினார்.
அதையடுத்து, அவள் காமத்தில் அதீத பற்று கொண்டு முன்பை விட தைரியமாக பல இளைஞர்களுடன் கூடி, தனது காம இச்சையை தணித்து உல்லாசமாக இருந்தாள்.
அந்த ஊரில் அவள் அழகில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்னும்படி அனைத்து ஆண்களையும் மயக்கியதால், அந்த ஊரின் அரசன் அவளால் நாட்டின் கலாச்சாரமே அழிந்து விடும் எனக்கருதி அவளை நாடு கடத்தினான்.
அதனால், காட்டுக்கு சென்ற அவள் அங்கிருந்த திருடர்களுடன் உல்லாசமாக திரிந்தபோது, அவள் உடல் அழகு சீர்குலைந்தது.
அதையடுத்து உடலில் வரக்கூடாத அத்தனை நோய்களும் வந்து அவதியடைந்த சந்திரகாந்தா, இறுதியில் அகால மரணம் அடைந்து யமலோகம் சென்றாள்.
நரக வேதனை
நரகலோகத்தில் பலவிதமான சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அவள் முற்றிலுமாக அனுபவித்தாள்.
சந்திரகாந்தா புருஷனுக்கு செய்த துரோகத்தினால் நரக வேதனை அடைந்தவளை மேலுலகில் இருந்த தர்ம தேவதைகள் பார்த்துவிட்டு அவள் நன்கு அவதிப்படட்டும் என்று மேலும் சபித்தார்கள்.
அதனால், அவள் மீண்டும் ஒரு பெண்ணாக தாசி வீட்டிலே பிறந்து பல ஆண்களை திருப்தி செய்ய வேண்டியிருந்தது.
அதனால், குஷ்டரோகமடைந்து உடல் முழுவதும் சீழ்புண்கள் வந்து படாத அவதியடைந்தாள்.
வியாதி வந்தவளை யார் சீண்டுவார்கள்? அங்கும் அவளை வீட்டை விட்டு துரத்தியதால், பிச்சை எடுத்து உண்ண வேண்டி இருந்தது.
அவளைக் கண்டாலே பார்க்கப் பிடிக்காமல் அனைவரும் துரத்தியதால் பசிக்கு உணவும் இல்லை.
உணவு தர யாரும் இன்றி பட்டினியால்வாடி அடுத்த சில தினங்களில் நடுத்தெருவில் இறந்து விழுந்தாள்.
இவ்வாறு சந்திரகாந்தாவிற்கு ஏற்பட்ட கதிதான் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் என்று கருட புராணம் கூறுகிறது.
கணவனுக்கு துரோகம் செய்தவளுக்கு நரகலோகத்தில் சித்திரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டிவரும் என்பதை எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.