
பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் போட வேண்டும்.
வீட்டில் வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தை மாட்டி வைக்கலாம்.
வீட்டில் மெல்லிய வாத்திய இசையை அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம்.
ஆகாச கருடன் கிழங்கில் மஞ்சள், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி வீட்டு வாசலின் மேற்பகுதியில் தொங்க விட வேண்டும்.
அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாகக் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் முதலானவை நீங்கும்.
அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி முதலான நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை மற்றும் அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டி வந்தால் திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும்.
அமாவாசையன்று வரமிளகாய், கடுகு, கல்லுப்பு இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழித்து நெருப்பில் போட்டாலே போதும் கண் திருஷ்டி நீங்கும்.