களத்திர தோஷம் இருந்தால் கணவன், மனைவியை பாதிக்குமா?
களத்திரம் என்றாலே ஒருவருக்கு விதிப்படி அமைய இருக்கும் வாழ்க்கைத் துணையை குறிக்கும். அதாவது, மனைவியையோ, அல்லது கணவனையோ, குறிப்பது ஆகும். அதாவது, ஜாதகத்தில் பார்த்தோமேயானால் ஏழாவது பாவத்தைத்தான் கணவன் அல்லது மனைவியைக் குறிப்பிடுகிறது ஜோதிடம். அந்த இடத்திற்குப் பெயர் தான் களத்திர ஸ்தானம் என்கின்றனர். பொதுவாக களத்திர ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்கக் கூடாது. சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் களத்திர தோஷம் என்கின்றனர். மேலும், களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து இருந்தாலும் மற்றும் சுக்கிரன் இராகு இணைந்து இருந்தாலும் அல்லது களத்திர ஸ்தானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஜாதகத்தில் நீச சுக்கிரன், அல்லது அந்த இடத்தில் கிரகங்கள் வலிமை இழந்து இருப்பதும் களத்திர தோஷத்தை உண்டாக்கும் என்கின்றனர். இந்த களத்திர தோஷத்தை கண்டு நாம் அஞ்ச வேண்டியது இல்லை. இவ்வாறு களத்திர ஸ்தானத்தில் தீய கிரகங்கள் இருந்தும் சிறப்பாக வாழ்ந்த ஜாதகங்கள் உண்டு.
களத்திர தோஷம் உங்களது ஜாதகத்தில் உள்ளதா? அதனால் நன்மையா? தீமையா? அல்லது வேறு ஏதேனும் தோஷம் உள்ளதா? போன்ற பல கேள்விகளுக்கும் விடை காண வேண்டுமா? கீழே உள்ள படத்தை அழுத்துங்கள்.