download_indicator

களத்திர தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்

ஒரு ஜாதகத்தில் திருமணத்தின் போது, மாங்கல்ய தோஷம் போலவே, களத்திர தோஷம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அதை, திருமணத்திற்கு முன்கூட்டியே கணித்து அதற்கான பரிகாரங்களை செய்தால் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இந்நிலையில், ஜாதகத்தில் களத்திர தோஷத்தை எவ்வாறு கண்டறியலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

1. லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.

2. 4-ஆம் இடத்தில் சனி, செவ்வாய், இராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12-ஆம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.

3. சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது இராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7-ஆம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.

4. சந்திரன் அல்லது லக்கினத்திற்கு 7-ஆம் இடத்தில் இராகு அல்லது கேது இருந்தாலும் கூட அது களத்திர தோஷத்தை தரவல்லது.

களத்திர தோஷத்தின் விளைவுகள்

களத்திர தோஷம் ஒரு ஜாதகத்தில் காணப்படுமாயின் அவருக்கு திருமணம் மிகவும் தாமதம் ஆகும்.

தாமதம் ஆனாலும் கூட திருமண வாழ்க்கையில் முழு திருப்தி இல்லாமல் போகலாம்.

தம்பதிகள் இருவருக்குமே களத்திர தோஷம் இருக்கும் பட்சத்தில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்ப்பதில் பயன் இல்லை.

பரிகாரங்கள்

1. திருமணஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் நலம்.

2. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து, வீட்டில் சுமங்கலி பூஜை செய்யலாம்.

3. ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள அருள்மிகு அரங்கநாயகி தாயாருக்கு பங்குனி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும், மஞ்சள் பட்டு பாவாடையும் சாற்றி வழிபட்டு வருதல் நலம் தரும்.

4. நவராத்திரியில் 9 நாளுமே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது நலம் தரும்.



Follow Us on