download_indicator

கையிலுள்ள ஐந்து விரல்களின் சிறப்பு!

மனிதர்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் விரல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை பிரதிபலிக்கின்றன. அதன்படி மனிதர்களின் கையில் உள்ள ஐந்து விரல்கள் என்பது ஐந்து தத்துவங்களை குறிப்பதையடுத்து, அதன் சிறப்புகளை அறிந்திடலாம்.

விரல்களின் அடையாளம்

மனிதர்களின் கைவிரல்களில் சுண்டுவிரல், மோதிரவிரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்றும், அகங்காரம், மாயை, கர்மா என்ற மூன்றையும், ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவையும், கட்டைவிரல் பரமாத்மாவையும் குறிக்கிறது.

ஒருவரது கையிலுள்ள ஐந்து விரல்கள் வெறும் உடல் உறுப்புகள் மட்டுமல்ல, அவை சிந்தனை, செயல், சமநிலை, அன்பு, புரிதல் ஆகியவற்றையும், தனித்துவத்தையும் கூறுகிறது.

விரல்களின் சிறப்புகள்

1. கட்டை விரல் – தன்னம்பிக்கையின் அடையாளம் கட்டை விரல்தான் கைக்கு வலிமையை கொடுக்கிறது.

இது அக்னி தத்துவத்தை குறிப்பிடுவதுடன், சக்தி, உழைப்பு, உற்சாகத்தை காட்டுகிறது.

தன்னம்பிக்கையை ஒருவரிடம் இந்த விரல் ஏற்படுத்துகிறது.

கட்டை விரல் இல்லாமல் மற்ற விரல்களால் எதுவும் செய்ய முடியாது.

அதுபோல், தன்னம்பிக்கை இல்லாதவர்களால் எந்த செயலிலும் வெற்றி காணமுடியாது.

2. ஆள்காட்டி விரல் – அறிவின் வெளிச்சம் ஆள்காட்டி விரல் வாயு தத்துவத்தை குறிப்பிடுகிறது.

அறிவு, நெறி உணர்வு, தீர்மான திறன் ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது.

வாழ்வில் சரி, தவறு என்பதை சுட்டிக்காட்டுவதுடன், ஒருவருக்கு வழிகாட்டும் ஆற்றலை வழங்குகிறது.

3. நடுவிரல் – சமநிலையின் சின்னம் கை விரல்களிலேயே நீளமானது நடுவிரல் ஆகும்.

இது ஆகாய தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

ஒருவரிடம் சமநிலை, பொறுமை, அமைதி ஆகியவற்றை நடுவிரலே வளர்க்கிறது.

வாழ்க்கையில் எந்த நிலையிலும் சரிசமமாக இருப்பதே நிம்மதிக்கு காரணம் என்பதை நடுவிரல் உணர்த்துகிறது.

4. மோதிர விரல் – அன்பும் நம்பிக்கையும் மோதிர விரல் பூமி தத்துவத்தை குறிப்பிடுவதுடன் நிலைத்தன்மை, அன்பு, உறவு, நம்பிக்கை ஆகியவற்றையும் குறிக்கிறது.

ஒருவரிடம் அன்பு என்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின்போது இந்த விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

இந்த விரல் குடும்ப பந்தங்களையும், பொறுப்பையும் தெரிவிக்கிறது.

5. சுண்டு விரல் – தொடர்பின் தத்துவம் சுண்டு விரல் பஞ்சபூதங்களில் நீருக்குரியதாக கூறப்படுகிறது.

இது பேச்சுத் திறன், புரிதல், உணர்ச்சி, தொடர்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

ஒருவரின் மனஅமைதி, கருணை, கலை உணர்வு ஆகியவைகள் சுண்டு விரல் மூலமாக வெளிப்படுவதாக கூறப்படுகிறது.

ஐந்து விரல்களும் ஒன்றாக சேரும்போதுதான் ஒரு கை உருவாகிறது.

அதேபோல் மனித வாழ்க்கையும் தன்னம்பிக்கை, அறிவு, சமநிலை, அன்பு, புரிதல் ஆகிய ஐந்து தத்துவங்களால் மட்டுமே முழுமை அடைகிறது.

விரல்களின் தோற்றம்

விரல்களின் மொத்த தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.

1. விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோர் இந்த விரல் அமைப்பை பெற்றிருப்பார்கள்.

2. விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

பிறரோடு சேர்ந்து பணிபுரிவதில், திறமை மிக்கவர்களாகவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர் ஆகியோர்களின் விரல்கள் இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.

கை விரல்களில் உள்ள விஷயங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on