அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

நாம் தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தாலோ, அல்லது நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதோ, கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும் போதோ, கை, கால்கள் மரத்துப் போவதை நாம் உணர்வோம். இதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

காரணங்கள்

பச்சிளம் குழந்தை, சிறுவர், சிறுமியருக்கும் மரபணு காரணமாக இந்த நரம்புக் கோளாறு வரலாம்.

உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால், மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.

உடலின் இரு பக்கமும் உடல் மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்சனை இருந்தால், அதற்கு மரபணுக் கோளாறு காரணமாக இருக்கலாம்.

தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் மரத்துப்போதல் ஏற்படலாம்.

அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிப்பு அடைந்து காணப்பட்டால், உடல் உறுப்புகள் மரத்துப்போகலாம்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும். கொதிக்கும் சுடுதண்ணீரை இவர்கள் மீது ஊற்றினாலும் உணர முடியாது.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை மற்றும் கால்கள் மரத்துப் போனால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகும்.

என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவுக்காரர்கள் கை, கால்கள் மரத்துப் போகாமல் இருக்க, ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும்.

கை, கால் மரத்துப்போகும் பிரச்சனை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.

வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.

பயன்தரும் இக்கட்டுரையை பலருக்கும் பகிருங்கள்.(ஷேர்)



Follow Us on