
நாம் உண்ணும் உணவு வகைகளில், பருப்புகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படுகிறது. அதில் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒன்று கடலைப்பருப்பு. இத்தகைய கடலைப் பருப்பை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
நன்மைகள்
கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமாக உள்ளது.
புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று கடலைப்பருப்பு ஆகும்.
கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது.
கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதய நலத்தை மேம்படுத்துகிறது.
கடலை பருப்பு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாக செய்கிறது.
கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும்.
கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரத சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கும்.
நீரிழிவு நோயாளிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் பலம் பெருகும்.