கால சர்ப்ப தோஷம் திருமணத்தை தடை செய்யுமா? பரிகாரம்
கால சர்ப்ப தோஷம் என்பது ஒருவர் வாழ்வில் நடக்க இருக்கும் சுப நிகழ்வுகள் அனைத்தையுமே தடுக்கும். அது திருமணம் மட்டும் அல்ல, குழந்தை பிறப்பையும் - சந்ததி விருத்தியையும் கூட சேர்த்து தடுக்கும். ஆனால், கால சர்ப்ப தோஷத்திற்கு முழு நிவர்த்தி பரிகாரங்களை சொல்லுதல் இயலாது. எனினும் தோஷத்தின் வலிமையை கீழ்க்கண்ட பரிகாரங்கள் மூலம் நாம் குறைத்து வாழ்க்கையில் மேன்மை அடையலாம்.
பரிகாரங்கள்
1. கோமேதகம் அல்லது வைடூரியத்தை இடது கை மோதிர விரலில் வெள்ளியில் செய்து சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்து ஏழு மணி இந்தக் கால கட்டத்தில் அணியலாம் அல்லது ஏதேனும் ஒரு அமாவாசை திதியில் அணியலாம்.
2. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் எந்த ஒரு தெய்வத்தையும் கற்பூரம் ஏற்றி வழிபடுதல் சிறப்பு.
3. கண்டிப்பாக ஆண்டிற்கு ஒரு முறையேனும் திருக்காளத்தி சென்று ஈசனை (பச்சைக் கற்பூர) அபிஷேகத்தின் சமயத்தில் வழிபடுதல் நலம்.
4. இராகு காலங்களில் துர்க்கையையும், சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரையும் வழிபடுதல் நலம்.
5. அவசியம் தினமுமே கோளறு பதிகம் படித்தல் நல்லது. அதுபோல, பாம்புடன் கூடிய அம்மனை அல்லது புற்று உள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுதல் சிறப்பு.
6. முடிந்தால் கருடக்கிழங்கு என்னும் மருத்துவ வேரை வீட்டின் வாயிலில் மாற்றலாம். அதேபோல, கருடன் மீது செல்லும் திருமாலின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.