ஜென்ம நட்சத்திரம் எதனால் சிறப்பு வாய்ந்தது?

ஒரு குழந்தை தன் வாழ்நாளில் எப்படி இருக்கும் என்பதை அதன் ஜென்ம நட்சத்திரம் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. ஜாதக ரீதியாக, சந்திரன் சஞ்சாரம் செய்யும் இடத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது, அது தான் அந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது. அதையடுத்து, ஜென்ம நட்சத்திரத்தின் சிறப்பு, அன்றைய தினத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பார்க்கலாம்.

சிறப்பு

மாதம் தோறும் வரும் ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.

அதனால், ஜென்ம நட்சத்திர தினத்தன்று கட்டாயம் இறைவழிபாடு செய்வது அவசியம்.

ஜென்ம நட்சத்திர வழிபாடு சாதாரணமான வாழ்க்கையை வெகு உயரத்திற்கு கொண்டு செல்லும்.

எனவே, அன்றைய தினத்தில் தவறாமல் கோயிலுக்கு சென்று உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை கூறி ஒரு அர்ச்சனை செய்து விட்டு வரவும்.

கோயிலில் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

இப்படி தொடர்ந்து செய்யும் பொழுது உங்கள் நட்சத்திர பலம் கூடும். இதனால் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அகலும்.

ஜென்ம நட்சத்திர தினத்தில் வழிபாடு செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைத்தே தீர வேண்டும் என்பது நியதி.

என்ன செய்யலாம்

இறை வழிபாடு, குலதெய்வ வழிபாடு, தான, தர்மம், அன்னதானம் வழங்குவது, பதவி ஏற்பது, புதிய சொத்துக்கள் வாங்குவது போன்ற செயல்களை செய்யலாம்.

என்ன செய்யக்கூடாது

ஜென்ம நட்சத்திர நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது, அறுவை சிகிச்சை செய்வது, மருந்து எடுப்பது, காது குத்துவது, தாம்பத்தியம் கொள்வது, முடி வெட்டுவது, சீமந்தம் செய்வது, திருமணம் செய்வது போன்றவைகளை செய்யக்கூடாது.

ஜென்ம நட்சத்திரம் எதனால் சிறப்பு வாய்ந்தது என்பதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.(ஷேர்)



Follow Us on