திருப்புமுனையை கொடுக்கும் ஜீவ சமாதி வழிபாடு

சித்தர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். சித்தர்களின் ஜீவசமாதிக்கு செல்லும்போது நேர்மறையான எண்ணங்களும், தெய்வீக அருளும் கிடைக்கும். அதனால், வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறுவதாக கூறுகின்றனர். அதையடுத்து, சித்தர்களை பற்றியும், அவர்களது சிறப்பு மற்றும் ஜீவ சமாதி வழிபாடு பற்றியும் அறிந்திடலாம்.

சித்தர்கள்

தன்னை அறிந்து, இறைவனையும் தரிசித்தவர்களே சித்தர்கள் எனப்படுகின்றனர்.

சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற்ற சித்தர்கள், இறைசக்தியின் மகத்துவத்தை அறிந்தவர்களாக உள்ளனர்.

அதனால், தாங்கள் மட்டும் பயனடைவது மட்டுமல்லாது, பொதுமக்களும் பெற வேண்டும் என்பதற்காகவே, சித்தர்கள் வழிகாட்டியாக உள்ளார்கள்.

அதனால்தான், சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் அருளாசி புரிகின்றனர்.

பொதுவாக சித்தர்கள் என்று கூறப்படுவதில் எண்ணற்றவர்கள் இருந்தாலும், அவர்களில் முதன்மையானவர்களாக போகர், அகத்தியர், கோரக்கர், கொங்கணர், புலிப்பாணி, பாம்பாட்டி, இடைக்காடார், கருவூரார் போன்ற 18 சித்தர்கள் உள்ளனர்.

அத்தகைய சித்தர்கள், இன்றைக்கும் சதுரகிரிமலை, திருவண்ணாமலை, பழநி, கொல்லிமலை, கஞ்சமலை போன்ற இடங்களில் அரூப வடிவில் இருப்பதாக நம்பிக்கை.

ஜீவ சமாதி வழிபாடு

சித்தர்கள் தங்களின் இறப்பு நேரத்தை முன்கூட்டியே அறிந்து, உயிருடன் சமாதிக்குள் சென்று அங்கு வசிப்பார்கள்.

அவர்களது ஆற்றல் அந்த சமாதியில் மட்டுமன்றி, பிரபஞ்சம் முழுவதும் வெளிப்படும்.

அதனால், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்களில் அவர்களை வணங்குவதே ஜீவ சமாதி வழிபாடாகும்.

அத்தகைய ஜீவ சமாதிக்கு சென்று வணங்கும் பக்தர்களுக்கு சித்தர்கள் சூட்சுமமாய் அருள்பாலிப்பார்கள்.

அதுவும், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சித்தர் வழிபாடு செய்தால் வேண்டியது நிறைவேறும்.

பெரும்பாலும், சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபடுவது வழக்கமாகும்.

சித்தர்கள் சமாதிக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு சுத்தமாக இருப்பவர்களுக்கு, சித்தர்களின் ஆசி விரைவில் கிடைக்கும்.

மேலும், அவர்களது பூர்வஜென்ம பலனை பொறுத்து சித்தர்களின் தரிசனமும் நேரில் கிடைக்கும்.

திருப்புமுனை

சாதாரணமாக, ஒரு மந்திரத்தை வீட்டில் ஒரு முறை கூறினால், 10 முறை கூறியதன் பலன் கிடைக்கும்.

அதுவே, பழமையான கோயிலில் 1000 முறை கூறிய பலனும், மலை மீதிருக்கும் கோயிலில் 1 கோடியும், கடற்கரை கோயிலில் கூறிட 2 கோடி பலனும் கிடைக்கும்.

சித்தர்கள் ஜீவ சமாதியில் அந்த மந்திரத்தை கூறிட 5 கோடி முறை கூறிய பலன் கிடைக்கும்.

இந்நிலையில், தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் கூறிட 100 கோடி மடங்கு பலன் கிடைக்கும்.

அதனால், வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டு மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.

மேலும், பூசம் நட்சத்திரத்தன்று சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும்.

ஜீவ சமாதிக்கு பூசம் நட்சத்திர தினத்தன்று சென்று வழிபட மறு பிறவி இல்லாத நிலை கிடைக்கும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on