அறுபது வயதில் ஜோதிடம் பார்க்கலாமா?
ஒவ்வொரு மனிதனுக்கும் அறுபது வயது என்பது ஒரு திருப்பு முனை ஆகும். அதாவது 60 வருடம் என்பது ஒரு காலசுற்று. அதாவது தமிழ் வருடம் என்பது மொத்தம் 60 என்பது யாவரும் அறிந்ததே! இந்நிலையில் ஆயுள் காரகன் சனி பகவான் 2 முறை அவர்கள் ராசியை இந்த 60 வருட கால சுற்றில் முழுவதுமாகக் கடந்து இருப்பார். எனவே ,அறுபது வயதில் ஜோதிடம் பார்ப்பது முறையா என்பதை பார்ப்போம்.
அறுபது சாந்தி
ஒருவருக்கு அறுபது வயது முடியும் போது அவருடைய ஜாதகத்தில் சில கோள்களின் நிலை அவர் பிறப்பின் போது இருந்தது போல அமைந்து இருக்கும். வாழ்வின் ஒரு சுற்று முடிந்து மீண்டும் சக்கரம் சுழல ஆரம்பிக்கும் போது அந்த கோள்களின் அமைப்பால் இடையூறு இல்லாமல் இருக்க விசேஷ சாந்தி பூஜைகள் செய்து மங்கல நீராட்டு செய்து கொள்ளலாம். அந்த சந்தர்ப்பத்தை 'அறுபது சாந்தி' என்பார்கள். எனினும் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது.
ஜோதிடம் பலிக்காது
அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது என்று சொல்வது தவறு. ஏனெனில் அறுபத்திற்கு மேல் ஜோதிடத்தில் உள்ள தோஷங்கள் அனைத்துமே வலு இழந்து போய்விடும் அல்லது இருக்காது. காரணம், அந்த தோஷத்திற்கான பலன்களையும் - பிரச்சனையும் அந்த ஜாதகர் ஏற்கனவே தனது ஆயுள் காலத்தில் சந்தித்து இருப்பார். இந்நிலையில், அதன் பின்னர் ஜாதகம் பார்த்து என்ன பிரயோஜனம்?... அதனால் 60 வயதிற்கு மேல் ஜாதகம் பார்ப்பது வீண் தான். ஆனால், கிரக திசா பலன்களை கணக்கிட்டு பலன் கூறலாம். மேலும், ஜாதகம் என்பது வாழ் நாள் முழுவதுமே பலிக்கக் கூடியது தான். அந்த வகையில் விருப்பப் பட்டவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டும் என்றாலும் ஜாதகம் பார்க்கலாம்.