download_indicator

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள்

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அவசரம் கருதி காலை உணவைத் தவிர்ப்பத்தை வழக்கமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய உடலின் தன்மையானது சீரற்ற நிலைக்குச் சென்று விடுகிறது. எனவே, காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கவே கூடாது. அதனால், ஏற்படக்கூடிய பாதிப்புகளை பார்க்கலாம்.

உடலில் கலோரிகள் குறைந்து சோர்வு ஏற்படலாம். உடலின் வளர்சிதை மாற்றம் சிதைய வாய்ப்புண்டு. காலை உணவைத் தவிர்த்து மதியம் கூடுதலாக சாப்பிடுவதால் உடை எடை கூடவும் வாய்ப்பு உண்டு.

காலை உணவை எடுத்து கொள்ளாததால் இயல்பாக சுரக்கும் ஜீரணிக்கும் அமிலம் குடலை அரிக்க ஆரம்பித்து விடும். இதனால், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்த்தால் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு அதனால் வேறு சில பிரச்சனைகள் தோன்றி கடைசியில் உயிருக்கேகூட ஆபத்தாக முடியும்.

இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறி தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுத்தும்.

ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும் பிரச்சனையாக கருதப்படுகிறது.

காலை உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எண்ணற்ற நோய்கள் தாக்கலாம்.

செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துக்கள் இல்லாமல் உணர்வு சமநிலையின்மை ஏற்படும். இதன் காரணமாக மன அழுத்தம், எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இருதயப் பிரச்சனைக்கு வழி வகுத்து விடும்.

காலை உணவைத் தவிர்க்கும் ஆண்களுக்கு 27% இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. மேலும், மூளையின் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது.



Follow Us on