download_indicator

இரவு நிம்மதியான தூக்கத்திற்கு கசகசா பால்

மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். இது இனிப்புச் சுவையையும், வெப்பத் தன்மையையும் கொண்டது. உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும் குணம் கொண்டது. பாலுடன் கசகசாவை கலந்து தினமும் இரவு அருந்தி வந்தால் நன்கு தூக்கம் வரும். மேலும், ஆண்மையைப் பெருக்கும் சக்தியுடன், குடல் புழுக்களைக் கொல்லும் திறன் உடையது. இதை தவிர்த்து கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மற்றும் இரும்பு சத்துக்கள் போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதையடுத்து, கசகசாவில் கிடைக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

பயன்கள்

கசகசா, மிளகு, பாதாம், கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, அதனுடன் பசும்பால், தேன், நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக்கி, அதில் ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை அதிகரிக்கும்.

கொத்தமல்லியுடன், கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

கசகசாவை ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, துவையலாக, சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகும்.

கசகசாவை, தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்புகள் மறையும்.

கசகசா, சாலாமிசிரி, பூனைக்காலி விதை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து கொள்ளவும் இதில் ஐந்து கிராம் பொடியை, தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

கசகசா, முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும் முகம் அழகு பெறும்.

கசகசா, ஜவ்வரிசி, பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி குணமாகும்.

கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் மூட்டு வலி உடனே குணமாகும்.

கசகசாவை முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல், படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

கசகசா, ஓமம், மாம்பருப்பு, மாதுளைத் தோல், சுண்டைக்காய் வற்றல் தலா 50 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து கெட்டித் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீத பேதி உள்ளிட்ட அனைத்து வகையான பேதியும் உடனே நிற்கும்.

கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணி கீரையில் போட்டுக் கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.

கசகசா,வாழைப்பூ, மிளகு, மஞ்சள் அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரவு நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் கசகசா பால் பற்றிய நன்மைகளை மற்றவர்களும் அறிந்திட (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on