download_indicator

இளைஞர்களை கவர்ந்த சுவாமி விவேகானந்தர்

விவேகானந்தர் என்றால் தெரியாதவரே இருக்க முடியாது. அவர் ஒரு சிறந்த தத்துவ ஞானியாவார். இன்றும் பல இளைஞர்களுக்கு, ஓர் உந்து சக்தியாக செயல்படக்கூடியவர் சுவாமி விவேகானந்தர்.

முக்கிய நிகழ்வுகள்

சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, கல்கத்தா நகரில், விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவி ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.

இவரது இயற்பெயர் நரேந்திர நாத் தத்தா என்பதாகும்.

இவர் முதன்முதலில் தக்ஷினேஷ்வர் காளி கோயிலில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தபோதுதான் ஆன்மிக பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

ஆன்மிக பயிற்சிக்காக ராமகிருஷ்ண மடம் மற்றும் தொண்டு, கல்வி, சமூகப் பணிகளுக்காக ராமகிருஷ்ண மிஷன் போன்றவற்றை நிறுவினார்.

உலக அளவிலான புகழ்

1893-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.

இவருடைய “எழுந்திரு! விழித்தெழு! இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம்” என்ற கோஷம் இன்றும் பல இளைஞர்களுக்கு பாதையாக உள்ளது.

தேசிய இளைஞர் தினம்

1984 முதல் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே, தேசிய இளைஞர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

விவேகானந்தர் ஞானமும், நம்பிக்கையும் கொண்ட தத்துவஞானியாக திகழ்ந்தார்.

மறைவு

விவேகானந்தர் தனது 39-வது வயதில், 1902 ஜூலை 4-ஆம் தேதி, பேலூர் மடத்தில் இருந்தபோது உடல்நலமின்றி மறைந்தார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். (ஷேர்)



Follow Us on