download_indicator

அனுமன் சாலிசா பாடல்களின்

அனுமன் ஜெயந்தி தினத்தில் அனுமன் நாமங்களை சொல்லி வழிபடுவதுடன், துளசிதாசர் இயற்றிய அனுமன் சாலிசாவையும் படிப்பது மிக சிறந்ததாகும். ஏனெனில், அனுமன் என்ற பெயரை கூறினாலே துன்பங்கள் ஓடும், துயரங்கள் தொலையும், தடைகள் நீங்கி நல்லன யாவும் வந்து சேரும். அதையடுத்து, அனுமன் சாலிசா பாடலின் தமிழ் அர்த்தம் என்னவென்று அறிந்திடலாம்.

நினைத்தது நடக்கும்

வீடு அல்லது கோயிலில் அனுமன் சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபட்ட பிறகே அனுமன் சாலிசாவை படிப்பது நல்லது.

அவரவர் வசதிப்படி தினந்தோறும் படிக்கலாம் அல்லது புதன், சனிக்கிழமைகளில் அவசியம் படிப்பது நன்மையாகும்.

இராம நாமம் இருக்குமிடங்களில் அனுமன் இருப்பார் என்பது ஐதீகம்.

அதுபோல், அனுமன் சாலிசா படிக்குமிடங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும், நினைத்தது நடைபெறும் என்பது நம்பிக்கை.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர ஆஞ்சநேயா நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன் வானரர்களின் தலைவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம் அஞ்ஜனையின் மைந்தன் வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன். துய சிந்தனைகளை விரட்டுபவன். நல்ல சிந்தனைகளின் நண்பன்.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா பொன்னிறம் பொருந்தியவன், சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன், ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன சிவபெருமானின் அவதாரமும், கேசரியின் மகனுமாகிய உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர அறிவாளியாகவும், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன் மிகவும் கூரிய புத்தியை உடையவன் ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய் மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா ஸனகர் முதலான முனிவர்கள் பிரம்மா போன்ற தேவர்கள் சிவபெருமான் நாரதர் கலைமகள் ஆதிசேஷன்.

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள் எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் சுக்ரீவனுக்கு இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம் ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்.

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை மனம் வாக்கு செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா சத்திய திரேதா துவாபர கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே நல்லோரையும், ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கு எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும், துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ ஆஞ்சநேயா உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

தமிழ் மொழியில் அனுமன் சாலிசா

1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!

மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!

2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!

அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே!

3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!

தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!

4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!

ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!

5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!

மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!

6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!

உனதொளி வீரத்தை வணங்குது உலகே!

7. பேரறி வாளியே! நற்குண வாரியே!

ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!

8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!

ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!

9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!

கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!

10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே

ராம காரியத்தை நலமுடன் முடித்தாய்

11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட

விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!

12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே

பரதனைப் போல்நீ உடனுறை என்றார்!

13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்

பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!

14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்

ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்

15. காலன் குபேரன் திசைக் காவலரும்

கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?

16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திட

ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!

17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்

அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!

18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே

சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!

19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே

ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!

20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்

நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!

21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!

நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!

22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!

காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!

23. நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!

மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!

24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!

மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!

25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!

பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!

26. தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!

மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!

27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்

ராமனின் பணிகளை நீயே செய்தாய்!

28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!

அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!

29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!

நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!

30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!

தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!

31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்

கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!

32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!

என்றும் அவனது சேவகன் நீயே!

33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!

தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!

34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!

ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!

35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்

அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!

36. துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!

வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!

37. ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!

விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!

38. நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ

அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!

39. அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்

சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!

40. அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்

அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!

அனுமன் சாலிசா பாடல் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on