download_indicator

குரு பார்க்க கோடி நன்மை என்பது உண்மையா?

பிரகஸ்பதி என்று தேவர்களால் அழைக்கப்பெறும் இராஜ கிரகமான குரு பகவான், தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12-ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார். "குரு பார்க்க கோடி நன்மை" என்று கூறுவதில் இருந்து அது எந்த அளவிற்கு உண்மை என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

குருவின் தன்மை

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5, 7, 9-ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார். குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா? அல்லது தீமை நடைபெறுமா? என்று நிர்ணயம் செய்வது அவசியம். குரு பார்வை என்பது 1, 3, 5, 9, 11-ம் வீடுகளில் அமர்ந்து, 1, 3, 5, 9,11-ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும். மேலும் 2, 4, 6, 7, 8, 10, 12-ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான், 2, 4, 6, 7, 8, 10, 12-ம் பாவகங்களுக்கு நன்மையைச் செய்ய வாய்ப்பில்லை. குரு வட்டமான மேஷம், சிம்மம், தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு திரிகோண வீடுகளாக (1, 5, 9) அமைந்து, அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் 100% நன்மைகளை அந்த ஜாதகருக்கு வாரி வழங்குவார், மேலும் "குரு பார்க்க கோடி நன்மை" எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 100% பொருத்தமாக அமையும்.

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து, மேஷம் சுய ஜாதகத்தில் 1, 5, 9-ம் பாவக நிலையை பெற்றால், இராணுவம், காவல் துறை, நீதித்துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மையைத் தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்றிருக்கும். அதிகார தோரணையும், அடக்கியாளும் யோகமும் பெறுவார்கள்.

சிம்மத்தில் குரு பகவான் அமர்ந்து சிம்மம் சுய ஜாதகத்தில் 1, 5, 9-ம் பாவக நிலையை பெற்றால், ஜாதகரின் அறிவுத்திறன் பிரகாசிக்கும். பல ஆன்மிக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், உலகிற்கு சமாதானத்தை ஏற்படுத்தும் யோகமும் பெற்றவர்கள். மருத்துவத்துறை, ஆன்மிகம், மன நலம், ஜீவகாருண்ய யோகம் போன்றவற்றில் வெற்றி பெறுவார்கள்.

தனுசுவில் குரு பகவான் அமர்ந்து தனுசு சுய ஜாதகத்தில் 1, 5, 9-ம் பாவக நிலையை பெற்றால், புதுமை விரும்பியாகவும், சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்களாகவும், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.



Follow Us on