download_indicator

குரு பகவானின் வரலாறு

நவக்கிரகங்களில் குருவாக வீற்றிருப்பவரே, மனிதர்கள் மற்றும் தேவர்களின் குருவாக அருள்புரிகின்றார். இந்த குரு பகவானே திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்வதையடுத்து, அவரது வரலாறு என்னவென்று காணலாம்.

குரு என்றால் யார்?

அறியாமை என்ற இருளை நீக்கி, ஞானம் என்ற வெளிச்சத்தை கொடுப்பவரே குரு என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து கலைகளிலும் ஒருவர் தேர்ச்சி பெறவேண்டுமென்றால், அவருக்கு அந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர் செயல்முறை கல்வி வாயிலாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

தான் அறிந்ததை மற்றவர்களும், அறிந்துகொள்ள வேண்டும் என்று மனதில் கள்ளமில்லாது இருப்பவரே, குரு அன்று அழைக்கப்படுவார்.

தனது வாழ்நாளில் பெரும்பகுதி நேரத்தை மாணவர்களுடன் செலவிடுபவரே குரு ஆவார்.

வரலாறு

சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாக பிறந்த பிரகஸ்பதி, கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கவும், நவக்கிரகங்களில் குருவாக திகழ்ந்திடவும் வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் செய்தார்.

பிரகஸ்பதியின் தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு நேரில் தோன்றி காட்சியளித்து, தேவர்களுக்கும், நவக்கிரகங்களுக்கும் குருவாக திகழ செய்தார்.

அத்துடன் மங்கல நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்கும் சக்தியையும் கொடுத்தருளினார்.

குரு பார்வை கிடைக்கும் பட்சத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், தொழில், வியாபாரத்தில் சிறந்து விளங்க முடியும்.

குருவின் அருள் ஆயுள் முழுவதும் கிடைக்க வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்க வேண்டியுமே, பெண்கள் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில், தங்கத்தில் செய்து அணிகிறார்கள்.

வழிபாடு

குருவிற்கு பிடித்தமான முல்லைப்பூ, மஞ்சள் வண்ணப்பூக்கள் அணிவித்து, கொண்டைக்கடலை சாற்றி, மஞ்சளாடை அணிந்து வியாழக்கிழமை குரு பகவானை வணங்கிட வேண்டியது அனைத்தும் நிறைவேறும்.

கரிய ஒளியுடன் குருவின் மஞ்சள் ஒளி சேரும்போதுதான் உலகில் உயிரின் உற்பத்தி அதிகரிக்கும்.

அதனால்தான், திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு குருவின் அருள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எனவே தினந்தோறும் குரு பகவானுடைய காயத்ரி மந்திரத்தை 2 முறையாவது படித்து வர நல்லது என்று கூறப்படுகிறது.

குரு காயத்ரி மந்திரம்

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே

க்ருணி அஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

நால்வகை வேதங்களையும் கற்றுணர்ந்து, பல கலைகளையும் கற்று, அதில் உயர்ந்த நிலைக்கு சென்று தேவர்களின் குரு என்ற அந்தஸ்தையும் பெற முடியும்.

மேலும், பிறருக்கு உபதேசிக்கும் குரு என்ற தகுதியை அடைந்திடலாம்.

தேவர்களின் குருவாக வருவதற்கு எத்தகைய தகுதிகள் வேண்டும் என்பதை எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on