எந்தத் திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்?

காகம் சனி பகவானுடைய வாகனமாக இருக்கிறது. மேலும் பித்ரு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் அமாவாசையில் காகத்திற்கு படையலில் இருந்து முதல் உணவு வைக்கப்படுகிறது. பொதுவாக அவரவர் செய்யும் புண்ணிய கர்மத்திற்கு ஏற்ப காகத்தின் மூலம் சில அறிகுறிகளை இறைவன் உணர்த்துகிறார். நாம் வெளியில் கிளம்பும் போது எந்த திசையில் இருந்து காகம் கரைகிறதோ, அதற்கு ஏற்ப காரிய வெற்றி ஏற்படும் என்று பட்சி சாஸ்திரம் சொல்கிறது. இதன்படி எந்தத் திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

காகம் கரையும் சகுன பலன்கள்

கிழக்கு (East) : எடுத்த விஷயம் லாபமாக முடியும். அரசு ஆதரவு பெருகும், தங்கநகை சேர்க்கை உண்டாகும், நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.

தென்கிழக்கு (South East) : தங்கத்தால் லாபம் பெருகும், பகைவர்கள் விலகுவர்.

தெற்கு (South) : எடுத்த காரியம் லாபமாக முடியும்.

தென் மேற்கு (South West) : பொருள் லாபம் ஏற்படும். தயிர், எண்ணெய், உணவுப் பொருள் அல்லது உணவு சம்பந்தப்பட்ட பொருட்களால் பெரும் அதிர்ஷ்டம் வரும்.

மேற்கு (West) : மனதிற்கு இனிய செய்திவரும். நெல், தானியம், முத்து, பவளம் போன்றவற்றால் லாபம், கடலில் இருந்து கிடைக்கும் பொருளால் லாபம் பெருகும்.

வடமேற்கு (North West) : எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.

வடக்கு (North) : வாகனத்தால் லாபம், வாகனச் சேர்க்கை உண்டாகும், வஸ்திரத்தால் லாபமும், புது வஸ்திர சேர்க்கையும் உண்டாகும்.

வடகிழக்கு (North East) : கையிலுள்ள பொருள் விரயமாகும்.

நீங்கள் வெளியில் செல்லும்போது, உங்களுக்கு நேரெதிரே நீங்கள் செல்லும் திசையை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வீட்டில் இருந்து கொண்டு, காகம், சூரியனைப் பார்த்து கரைந்தால் அது அபசகுனமாகும்.

காகம் நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களுக்கு வலப்புறமிருந்து இடப்புறம் பறந்து சென்றால் லாபமும், இடது புறம் இருந்து வலப்புறம் பறந்து சென்றால் செல்லும் காரியம் நஷ்டம் ஆகும்.



Follow Us on