எண்ணெய் குளியலை தவிர்க்க வேண்டிய நாட்கள்?

பாரம்பரிய வாழ்வில் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல எளிய வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்ததில் வாரம் ஒரு நாள் எண்ணெய் குளியல் செய்வது ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த பழக்கம் இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறி விட்டது. பொதுவாக எண்ணெய் குளியல் செய்யும் போது, உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். அதனால், சூரிய ஒளி நம் உடலில் படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக எடுத்துக்கொள்ளும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, கண்டிப்பாக சுடுநீரில் தான் குளிக்க வேண்டும். இந்நிலையில் எண்ணெய் குளியல் செய்வதற்கு ஏற்ற நாட்கள் எது, தவிர்க்க வேண்டிய நாட்கள் எது என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்,

தவிர்க்க வேண்டிய நாள்

அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் பிறந்த நாள் போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.

அதிகாலை ஐந்து மணி வரை வானம் இருளாக இருக்கும் என்பதால், இருள் விலகும் வரை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

கேட்டை, உத்திரம், திருவோணம், திருவாதிரை போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, நவமி, சதுர்த்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்தால் ஆயுள் குறைவு ஏற்படும், புத்தி குறையும், உடல் வலிமை இழக்கும், செல்வ நிலை பாதிக்கப்படும்.

பரிகாரம்

ஆண்களும், பெண்களும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் தவிர்க்க வேண்டிய நட்சத்திரம், திதி போன்றவை கலந்து வந்தால் நல்லெண்ணெய் உடன் சிறிதளவு நெய் அல்லது தண்ணீர் கலந்து தேய்த்து குளிக்கலாம்.

சிறந்த நாள்

பெண்களுக்கு செவ்வாய், வெள்ளி நாட்கள் மட்டுமே சிறந்தது.

ஆண்களுக்கு புதனும், சனியும் மட்டுமே உகந்த நாட்கள் ஆகும்.

காலை 5 முதல் 7 மணிக்குள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

திருதியை மற்றும் பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை, சுவாதி நட்சத்திரம் கூடிய வியாழக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஆகிய நாட்கள் சனிக்கிழமையில் சேர்ந்து வரும்போது, ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம்.

பயன்கள்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சனைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால் வலி, உடல் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

நல்ல தூக்கம் கிடைக்கும். ஆயுள் விருத்தி அடையும்.

ஆரோக்கியம், செல்வநிலை உயர்வு, நீண்ட ஆயுள் போன்றவை கிடைக்கும்.

சந்ததி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

எந்தெந்த நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது என்பதை ஆண்கள், பெண்கள் அனைவரும் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on