download_indicator

தொப்பையை இப்படியும் குறைக்கலாம்

விருப்பமான உணவு, சுவையான உணவு, இனிப்பான உணவு என்ற பெயரில் நாம் அடிக்கடி நமக்கு தேவையானதை சாப்பிடுவதுடன், சாப்பிடும் போது அதிகளவில் சாப்பிடுவதன் காரணமாகவும் உடலில் தொப்பை ஏற்பட்டு உடல் பருமன் ஆகிறது. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் வருவதுடன் எங்கும், விரைந்து செல்வதற்கு நம்மை யோசிக்க வைக்கும். அதனால் சோம்பேறித்தனம் அதிகமாகி, மேலும் உடல் தொப்பை ஏற்பட நமக்கு நாமே வழி ஏற்படுத்தி விடுகிறோம். அதையடுத்து, தொப்பையை விரைவில் குறைப்பதற்கான, அன்றாட உணவுகளை எடுத்துக் கொண்டே மிக எளிய வழியில் எவ்வாறு தொப்பையை குறைப்பது என்று பார்க்கலாம்.

அருகம்புல் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் இரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

தினமும் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும். காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவாது. அதிகரிக்கும்.

உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம். நொறுக்கு தீனிகளை தவிர்க்கவும்.

நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

கொழுப்புள்ள உணவுகள், ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பாகற்காய் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்து வந்தால், தொப்பை கரையும்.

தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். குறிப்பாக, இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்வதால் தொப்பை வேகமாக கரையும்.

சிறிய தூரங்களுக்கு வண்டியில் செல்வதை தவிர்த்து நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களுக்கும் வலு கிடைக்கும்.

பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்கும்.

தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சத்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான உடற்பயிற்சியாகும்.

தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். அவ்வாறு தூங்குவதால், தொப்பை குறையும்.



Follow Us on