
“உணவே மருந்து, மருந்தே உணவு” என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் அதனால் தான், அவர்கள் நல்ல திடமான உடலுடன், ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்ந்தனர். பழங்கள் என்பது இயற்கை அன்னை கொடுத்த அருங்கொடை என்று சொல்லலாம். அதிலும் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகை ஊட்ட சத்துக்கள், சுவை மற்றும் ஒவ்வொரு வகை மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. எப்போது பழங்களை சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம் என்னென்ன நோய்களுக்கு மருந்தாகிறது. தினமும் பழங்கள் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள்
கால்சியம்,
அயர்ன்,
பாஸ்பரஸ்,
பொட்டாசியம்,
தாதுப்பொருட்கள்,
வைட்டமின்கள்,
நார்ச்சத்து,
நீர்ச்சத்து
ஆகிய சத்துக்கள் பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.
தினமும் சாப்பிடவேண்டிய பழங்கள்
வாழைப்பழம்
இரவில் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்கி அந்த நாள் முழுவதும் சுறுப்புடனும், வலிமையாகவும் செயல்படலாம்.
தர்பூசணி
இந்த பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதில் நீர் சத்து மிகவும் அதிகம், மேலும் உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்.
பப்பாளி
பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கி சருமத்திற்கு அழகான தோற்றத்தை கொடுக்கும். மேலும் உடலில் அதிகம் வெப்பம் இருப்போர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தை இரவில் சாப்பிட்டு படுத்தால் நன்றாக துக்கம் வரும், மேலும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும்.
தினமும் எவ்வளவு சாப்பிடணும்
ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அல்லது 800 கிராம் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களை சாப்பிடும் முறை
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.